Saturday, April 18, 2020

மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம்

நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை
இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்? என்ன செய்வது..!?

“சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.


ஒரு மாதத்தில்
மூன்று பேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார்.

அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம்
மறந்து விட்டதோ?”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்”
என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாட்டு நிலையை கவனித்த போது தாங்கள் கைதட்ட கேட்டு கொண்ட போது
இவன் மணியடித்துக் கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது..

ஏன் இவ்வாறு செய்கிறாய் என்று கேட்டதற்கு
கை தட்டினால் கை வலிக்குமல்லவா..!? அதற்குத்தான் இப்படி.." என்றான்..

அதனால் இவன் தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”

என்று சொன்னார் அமைச்சர்.

“மெச்சினோம்..
சரி அடுத்து”

“இதோ இவன் தாங்கள் விளக்கு பிடிக்கச் சொன்னதை ஏற்று வாயில் மண்ணெண்ணெயை ஊற்றி தன் வாயையே எரித்து தன் பக்தியை காட்டி விட்டான்..

இவன் தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்து கொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார்.

பின்னர் “அடுத்தது” என்றார்.

"எங்களை இளிச்சவாயனாக்க
உங்களை அடிக்கடி இந்த அரியணையில் அமர்த்த அந்த இவிஎம் மெஷினை கண்டு பிடித்தானே அந்த படுபாவி இவன் தான் அந்த இரண்டாவது முட்டாள்.."

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

கொஞ்ச நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பிய மன்னர்,

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது.
நான் மக்களை
எந்த நிலையிலும் நம்ப மாட்டேன் என்பதை சரியாக கணித்து விட்டீரே."

“சரி இருக்கட்டும்
எங்கே அந்த
முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்..

"பொருளாதாரம் படுபாதாளத்தில்
கிடக்க சமயத்தில் கொரோனா கைகொடுக்க சட்டென ஊரடங்கை அமுலாக்கி அதிலும் கலக்க்ஷன் வழி கஜானாவை நிரப்பி பழியை கொரோனா
மீது போட்டு தப்பிக்க நினைக்கும் தாங்கள்
தான் படிக்காத அந்த படுபயங்கரமான
முதல் முட்டாள் மன்னா"



Saif Saif

No comments: