Shahjahan R
இஸ்லாமிய நண்பர்கள் கவனத்திற்கு
ஷபே-பராத் (Shab-e-Barat) என்பது இஸ்லாமியர்களின் ஒரு பண்டிகை. ரம்ஜான் அல்லது பக்ரீத் போல கோலாகலமாகக் கொண்டாடப்படுவதில்லை. இஸ்லாமிய காலண்டரின் எட்டாவது மாதம் ஷாபான். அந்த மாதத்தில் 14-15 தேதிகளுக்கு இடைப்பட்ட நாளில் வரும் இரவுதான் ஷபே பராத்.
இந்த நாளில் இஸ்லாமியர்கள் மசூதிகளிலும் வீடுகளிலும் சிறப்புத் தொழுகை நடத்தி, இறைவனிடம் மன்னிப்புக் கோருவார்கள். அவர்களின் கடந்தகாலச் செயல்களின் அடிப்படையில் கணக்கை இறைவன் எழுதுவான் என்பது ஒரு நம்பிக்கை.
நாளை ஷபே பராத் இரவு
வழக்கம்போல சிறப்புத்தொழுகைக்கு பள்ளிவாசல்களுக்குப் போய்விடாதீர்கள், கூட்டம் சேராதீர்கள் என்று இஸ்லாமிய நண்பர்கள் தங்கள் சுற்றத்துக்கும் நட்புகளுக்கும் புரிய வையுங்கள். சிறப்புத் தொழுகையை வீட்டிலிருந்தபடியே செய்யலாம்.
No comments:
Post a Comment