Thursday, April 23, 2020

முகமது நபி விரும்பிய உணவு வகைகள்

Dr.Vavar F Habibullah



முஸ்லிம்கள், புனித மாதமாக
கருதும் ரம்ஜான் துவங்க இருக்
கிறது.நோன்பு முடியும் மாலை
நேரம் (இப்தார்) வீடுகளில் அறு
சுவை உணவு வகைகள் மணம்
பரப்பும்.

ஆனால் முகமது நபி அவர்கள்
வாழ்ந்த அந்த நாட்களில்
சாதாரண நீரை மட்டும்
பருகியே அவர்கள் நோன்பை
நிறைவு செய்வது வழக்கமாக
இருந்தது.


பார்லி,திராட்சை,
பேரீத்தம் பழம்,பால், தேன்
வினிகர்,மஷ்ரூம்ஸ்,மெலன்
போன்ற வெஜிடேரியன் உணவு
வகைகளையே அவர்கள் அதிகம்
விரும்பிய உணவு வகை என
இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர்கள்
சொல்வது ஆச்சரியம் தருகிறது.
எப்போதுமே அவர்கள் வயிறு
நிரம்ப உண்டதில்லை.பசித்
தால் உணவருந்தி, பசி உணர்வு
உள்ள போதே உணவை நிறுத்த
போதித்தவர் அவர்.

இரைப்பையில் மூன்றில் ஒரு
பகுதியை உணவாலும், அடுத்த
பகுதியை நீராலும் நிரப்பிய பின்
மூன்றாவது பகுதியை நிரப்பாமல்
விட்டால், சுவாசம் மேற்கொள்ள
ஈஸியாக இருக்கும் என்ற
மருத்துவ அறிவை அப்போதே
எடுத்துரைத்தவர்.பசி இல்லாத
போது உணவருந்துவது தவறு
என்று போதித்தவர்.

இஸ்லாம் இறைச்சி உணவுகளை
அநுமதித்தாலும் அவர் அவற்றை
அதிகம் விரும்பியது இல்லை.
மனிதன் மிருகங்கள் போல்
ஒரே மூச்சில் நீர் அருந்தக்
கூடாது. எவ்வளவு தாகம்
இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக
இடைவெளி விட்டு, நன்கு மூச்சை
இழுத்து விட்டு, சிறிது சிறிதாக
அருந்த வேண்டும் என்பது அவர்
போதித்த நன்னெறி.உணவின்
கடைசிப் பகுதியில் தான் அதன்
அருள் புதைந்திருக்கிறது என்ற
உணவின் உண்மை ஆன்மீகத்தை
ஊருக்கு உணர்த்தியவர் அவர்.

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணி
களும்,தம் இரு இறக்கைகளால்
பறக்கும் பறவைகளும் உங்களை
போன்ற இனமேயன்றி வேறில்லை.
அல்குர்ஆன் 6:38

மிருகங்களும் பறவைகளும்
மனித ஜாதிக்கு ஈடானவை
என்று அல்குர்ஆன் மொழிவதை
கேட்கும் போது மிருக பறவை
களிடம் கூட மரியாதை வருகிறது
காரணம், “அவை யாவும் அவற்றின்
இறைவனிடம் ஒன்று சேர்க்கப்படும்.”
என்று குர்ஆன் உறுதி மொழி
தரும் போது....சிந்திக்க தூண்டும்
கருத்துக்கள்.

/dr.habibullah

No comments: