Saturday, February 22, 2020
மதமா இல்லை மொழியா! / Vavar F Habibullah
உலகில் தாய் மொழிக்காக
உயிர் கொடுத்த ஒரு இனம்
உண்டு என்றால் அது நமது
பக்கத்து நாடு, பெங்காளி
மொழி பேசும் பங்களாதேஷ்
மக்களையேச் சாரும்.
1947 ம் ஆண்டு
ஒன்றிணைந்த இந்திய தேசம்
அன்றைய நமது தேசபக்தர்களால்
இந்தியா, மேற்கு பாகிஸ்தான்,
கிழக்கு பாகிஸ்தான் என பிளவு
பட்ட போது....
1948 ம் ஆண்டுகளில்
பாகிஸ்தான் அரசு உருது
மொழியை தனது நாட்டின்
தேசிய மொழியாக அங்கீகரித்து
சட்டம் இயற்றியது. ஈஸ்ட்
பாகிஸ்தான், (இன்றைய
பங்களா தேஷ் மக்கள்) அந்த
சட்டத்தை எதிர்த்து கிளர்ந்து
எழுந்தனர்.
மதம் ஒன்றே ஆனாலும், மொழி
இனம், கலாச்சாரம், பண்பாடு,
நாகரீகம் என அனைத்து
விசயங்களிலும் மாறுபட்டு
விலகி நிற்கும் எங்களை
‘பாகிஸ்தானி’ என்று சொல்வதை
யும்,ஆரிய,பார்ஸி கலந்த கலப்பு
மொழியான உருதுவை எங்கள்
தாய் மொழி என்று சொல்வதை
யும், அந்த மொழியை எங்கள் மீது
திணிப்பதையும் இரண்டாம் தர
குடிமக்களாக எங்களை
நடத்துவதையும் ஏற்றுக் கொள்ள
இயலாது,அதை அநுமதிக்கவும்
இயலாது. கண்டனக் குரல்கள்
நாடெங்கும் ஓங்கி ஒலித்தன.
மதத்தின் அடிப்படையில் பிரிந்து
போன ஒரு நாடு,எப்படி மொழி
யின் காரணமாக இன்னொரு
பிரிவினைக்கு வித்திட முடியும்.!
மதத்தின் பெயரால் நாடுகளை
பிரிப்பது, கூறு போடுவது
எவ்வளவு முட்டாள் தனமான
காரியம் என்பதை உலக நாடுகள்
அறிந்துகொள்ள வகை செய்த
ஒரு சந்தர்ப்பம் இது என்றே
இந்த நிகழ்வை கருத வேண்டும்.
21 பெப்ருவரி 1952 ம் ஆண்டு
மொழிப் போருக்காக கிளர்ந்
தெழுந்த அன்றைய டாக்கா
பல்கலைக்கழக மாணவர்கள்
மீது பாகிஸ்தான் அரசு அத்து
மீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் பல
நூறு மாணவர்கள் உயிர் இழந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் காயம்
அடைந்தனர்.
அன்று, பங்களா தேஷில்
தாய் மொழி காத்திட நடந்த
இந்த மாணவர் போராட்டம் தான்
பின்னாளில், ஈஸ்ட் பாகிஸ்தான்
என்ற அவப்பெயரை அந்த மக்கள்
தூக்கி எறியவும், பங்களா தேஷ்
என்ற தாய் மொழிப் பெயரால்
தங்கள் நாட்டை பெருமையுடன்
அழைத்து கொள்ளவும்
பாகிஸ்தான் என்ற ஒரு அன்னிய
நாட்டின் பிடியில் இருந்து
தங்களை விடுவித்து கொள்ளவும்
சுதந்திரம் பெறவும், சுதந்திர
காற்றை நுகரவும் பங்களாதேச
மக்களுக்கு நல்லதொரு வாய்ப்பை
நல்கியது எனும் போது பேசும்
தாய் மொழி மீது அவர்கள்
கொண்ட பற்று பாசம்
வியக்க வைக்கிறது.
என்றாலும்.....
இந்த மொழிப் போர் தியாகம்
தான் அவர்கள்,பாகிஸ்தான்
நாட்டில் இருந்து முழுமையாக
தூக்கி எறியப்படவும்,பாகிஸ்தான்
ராணுவத்தால், சொந்த நாட்டில்
இருந்து விரட்டி அடிக்கப்படவும்
பிற நாடுகளில் சிலர் அகதிகளாக
தஞ்சம் பெறவும் வழி வகுத்தது
என்று சொன்னால் அது மிகையல்ல.
இந்த மொழித் தியாக
சம்பவமே.. யுனெஸ்கோ
இந்த நாளை (21 FEBRUARY)
உலக தாய் மொழி தினம் என
அறிவிக்க காரணம்
என்று அறியும்போது.....
மதம் கடந்த மொழி உணர்வு
சற்று சிந்திக்க வைக்கிறது.
அன்று...நெல்லை
பாளையம்கோட்டையில்
செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில்
பியூசி படிக்கும் போது நண்பர்கள்
வலம்புரி ஜான்,இருங்கோவேள்
ஹரிஅரன்,ஸ்டீபன் ஆகியோருடன்
கல்லூரி வளாகத்தில் இருந்து
மரியா காண்டீன் வரை,”ஹிந்தி
ஒழிக, தமிழ் வாழ்க” என்று கோஷம்
போட்டதும், போலீஸ் துரத்தியதும்
இப்போது நினைவில் வந்து
போகிறது.
Vavar F Habibullah
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment