Tuesday, February 11, 2020

குடியுரிமை கருப்புச் சட்டத்தை எதிர்த்து உரிமை முரசு கொட்டும் பாடல்

குடியுரிமை கருப்புச் சட்டத்தை எதிர்த்து உரிமை முரசு கொட்டும் பாடல்.
.....................................................................
"எமை அன்னியன் என்பது முறைதானா"

இயற்றிவர் : எஸ்.ஏ.சி ஹமீது
இசை & பாடல் : கலைமாமணி தேரிழந்தூர் தாஜுத்தீன் பைஜி
..
..................................................................
சுதந்திரம் காத்திட
சிறை கண்டு
சிந்திய முஸ்லிம்
ரத்தமெல்லாம்
தந்திர அரசின்
சட்டத்தால் - இன்று
அன்னிய ரென்பதும்
முறை தானோ! (2)



இந்திய விடுதலை போரினிலே
சீன பாகிஸ்தான் எல்லையிலே
தேசம் காக்க உயிர்விட்ட
இந்திய முஸ்லிம் அன்னியனா ? (2)
(சுதந்திரம்)

பள்ளியில் ஒன்றாய் படித்தோமே
சோறையும் நீரையும் பகிர்ந்தோமே
வாழ்விலும் சாவிலும் தோள் கொடுத்த
தோழா நாங்கள் அன்னியனா ? (2)
(சுதந்திரம்)

பிறந்தது இந்திய மண்தனிலே
இறப்பதும் இந்திய தாய் மடியில்
இடையில் குடிமை சட்டமென்று -எம்
குடியை கெடுப்பது முறை தானோ (2)
(சுதந்திரம்)

கடவுச் சீட்டும் ஆதாரும்
ரேஷன் கார்டும் தந்து விட்டு
இல்லா ஆதாரம் கேட்டெம்மை
அன்னியரென்பது முறை தானா ? (2)
(சுதந்திரம்)

ஆங்கிலேயரின் அடிமைகளாய்
அவர்தம் காலை நக்கிவிட்டு
இந்திய தேசம் கட்டமைத்த -எம்மை
அன்னிய ரென்பது எதனாலோ ?( 2 )
(சுதந்திரம்)

No comments: