Saturday, February 8, 2020

யாகோபு சித்தரின் யாகோபு சுண்ணகாண்டம் என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடல்.

"ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்தநபிமார்கள்
பாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது
போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்
தன்னை வானந்த மாகவே அறுநூறாக
வகயாகப் பாடினேன் வண்மையாகக்
கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே" -யாக்கோபு என்ற இராமதேவர்

இவர் நாகப்பட்டினத்தைத் தாம் வாழ்விடமாகக் கொண்ட சித்தர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:05, 9 சனவரி 2013 (UTC)


சித்தர்களின் குரல்.

புலஸ்தியரின் சீடராக அறியப்படும் ராமதேவர் எனப்படும் யாகோபு தமக்கு எல்லாம் அருளியதாக மனோன்மணி தேவியை சுட்டிக் காட்டுகிறார்.

உளம்கனிய மனோன்மணி யாள்வாவா வென்றே
உண்மை யென்ற பொருளீந் தாள்உருபெற்றேன்
உண்மை யுடன்வாராம தேவாயென்றாள்
கருவான கருக்குருவு மெனக்கே யீந்தாள்
கைபாகம் முறைபாகம் கணக்கின் பாகம்
திருவான வொரு பாகம் குருவின் பாகம்
செம்மையுடன் நன்றாக செப்பினாள் பார்
குருவான குருவருளா லாத்தா என்னை
கூப்பிட்டு காப்பிட்டு குறி சொன்னாளே

_ வைத்திய காவியம்

#நாகையில் வாழ்ந்தவராகையில் வியாபாரத்திற்கு அரபு தேசத்திலிருந்து வந்த இஸ்லாமிய வணிகர்களோடு உறவு கொண்டிருந்தார்.

சிவனை பூஜித்து சித்தி பெற்று #காசி விசுவநாதரை தம் தவ வலிமையால் நாகைக்கு எழுந்தருளச் செய்து ஸ்தாபித்தார் எனவும் கூறுவர்.

போகரை தரிசித்து உபதேசம் பெற்ற பின் அவரைப் போலவே பல தேசங்களுக்கு சென்று வர விரும்பினார். அதிலொன்று #மெக்கா. அங்கு சமாதியிலிருந்து அருள்பாலிக்கும் #நபிகள் நாயகத்தின் உபதேசம் பெற விரும்பி #ககன_மார்க்கமாக மெக்கா ஏகினார்.

போனாரே மலைநாடு குகைக் கடந்து
பொங்க முடன்நபிதனையே காணவென்ற
கானாறு பாதைவழி செல்லும் போது
கடுங்கா ளைநபிக்கூட்டம் மிகவாய் கண்ட
மானான மகாதேவர் பதியிலப்பா
மார்க்க முடன்வந்தி னால்யுந் தமக்கு
தீனான தீன்பதியில் யுந்தனைத் தான்
திட்டமுடன் சபித்திடுவோம் என்றிட்டாரே

(போகர் : 7000/5800)

(பல மலைகள், நாடுகள், காட்டாறுகளைக் கடந்து நபிகளை சந்தித்து உபதேசம் பெறச் செல்கையில் வழியில் யோக நிலையில் இருந்த சித்தர்களை கண்டார். அவர்கள் எல்லாம் ஒன்று கூடி எங்கள் மகாதேவர் நபிகள் இருக்கும் இந்த (முகையதீன்) தேசத்திற்கு நீர் வந்ததினால் நாங்கள் உங்களை சபித்து விடுவோம் என எச்சரித்தனர்)

உடனே அவர்கள் கூட்டத்தை பணிந்து வணங்கி, தம் குரு பரம்பரையையும், நபிகள் நாயகத்தை கண்டு தரிசிக்க வந்ததையும் கூற மனம் மகிழ்ந்து "யாகோபு" என்ற நாமம் வழங்கி, சுன்னத்து செய்து சாப்பிட ரொட்டி தந்து ப்ரணவத்தை உபதேசித்தனர்.

என்றவுடன் இராமதேவர் தாள் பணிந்து
எழிலான வார்த்தை யதுகூறும் போது
சென்றுமே யாகோபு யென்று கூறி
சிறப்புடனே சுன்னத்து செய்துமல்லோ
தின்றிடவே ரொட்டியது தானும் யீந்து
சிறப்புடனே அசன்உசேன் என்றுகூறி
வென்றிடவே யுபதேச பிரணவத்தை
விருப்பமுடன் மலுங்குமா ரோதினாரே.

அகத்தியர் பனிரெண்டாயிரம் நான்காம் காண்டத்தில்

வண்மையா ம்யாக்கோபு யென்ற நாமம்
வகுத்தார்கள் மக்கதேச மாண்பரெல்லாம்
உண்மையாய் மக்கமதீன் நகருக்கப்பா
உத்தமனே யாக்கோபு சென்ற பின்பு
கண்மையாம் சுன்னத்து செய்தாரங்கே
கருவான ரொட்டியது தந்தார் பாரே
12000/4,643

இராமதேவர் நபிகளை கண்டு உபதேசம் பெற அவர்களின் தொழுகை முறைகள், ஒழுக்க முறைகள், கோட்பாடுகளால் கவரப்பட்டு யாகோபு எனும் பெயர் அடைந்து அங்கு உருது மொழியில் பல வாத, வைத்திய, யோக, ஞான நூல்களை இயற்றியுள்ளார்.

இனம், மொழி, ஜாதி, மதம் அனைத்தையும் கடந்தவர்கள் சித்தர்கள். இராமதேவர் மதம் மாறியதை சித்தர்கள் யாரும் எதிர்க்கவில்லை. அதை வரவேற்கும் விதமாக போகர் கூறுகிறார் பாருங்கள்

மேன்மையாம் முன்சொன்ன ராமதேவர்
மெய்யான குலமென்றே செப்பலாகும்
தேன்மாரி பொழிகின்ற மச்சு தேசம்
சென்றல்லோ பெயர்மாறி வுருவுகொண்டார்
வான்மீது வருந்ததிப் போலுதிக்குந் தீரன்
மகத்தான ராமதேவ ரென்னலாமே...

பின் சதுரகிரி வந்தடைந்து
தமிழில்

வைத்திய காவியம்
வைத்திய சிந்தாமணி
சுண்ணக் காண்டம்
சிவயோகம்
சுண்ணம், லோகசெந்தூரம்,வாத வைத்தியம்
பஞ்சமித்திரம், தண்டகம், வைத்திய கல்லாடம்
வைத்தியம் 300 ,செந்தூர சூத்திரம் 155, சூத்திரச் சுருக்கம் 150, சூத்திரச் சுருக்கம் 57
வைத்திய வாத சூஸ்திரம் 400
எனப் பல நூல்களை இயற்றியுள்ளார்.
எல்லா நூல்களிலும் யாகோபு என்ற பெயரே காணப்படுகிறது.
இதில் சிவயோகம் மட்டுமே இராமதேவர் என்ற பெயரில் இருக்கிறது.

இவரது சமாதி #அழகர்_மலையில் இருப்பதாக நம்பப்படுகிறது.

இது போன்ற அபூர்வ சித்த நூல்கள் கிடைக்குமிடம்.
#தாமரை_நூலகம்
எண் 7 என்.ஜி.ஓ.காலனி
வட பழனி
சென்னை 600026
தொ.பே.எண் 4800249

சித்தர்களின் குரல்.

No comments: