Vavar F Habibullah
அரிஸ்டாடிலிடம் படித்ததால்
மகா அலெக்சாண்டருக்கு
ஜோசியத்தில் எப்போதுமே
நம்பிக்கை இருந்ததில்லை.
ஹோமரின் ‘இலியடை’ படித்து
அதில் வரும் ‘ஆகில்லஸ்’
கதாபாத்திர நாயகர்
வீரத்தை அறிந்து
கொண்ட அலெக்சாண்டர்
உலகின் பெரும் பகுதியை
தன் வாளால்
வெல்ல முடியும் என்றே
நம்பினான்.
கிரேக்கம் ரோமம்,பாரசீகம்
எகிப்து, இந்தியா என அவன்
காலத்தில், உலக வரை படத்தில்
இருந்த நாடுகள் எல்லாம்
ஒவ்வொன்றாக அவன் காலடியில்
விழுந்த போது அவன் வெற்றி
தேவதையின் வீரமகன் என்றும்
சாகா வரம் பெற்ற தெய்வமகன்
என்றுமே அவன் எதிரிகள் கூட
நம்பினர்.
பாபிலோனியாவில்...
இரவில் சற்று ஓய்வுக்காக
தன் வீரர்களுடன் தங்கிய போது
32 வயதே ஆன தங்கள் சிங்கத்
தலைவனின் வெற்றிகளை
பாராட்டி, போர்ப்பரணி பாடி ஆடி,
உண்டு, களித்து மகிழ்ந்தனர்
அவனது போர்ப்படை தளபதிகளும்
வீரர்களும்.
“உலகில் உன்னை வெல்ல
எவனும் இதுவரை
பிறக்கவில்லை.”
ஒரு ஜோசியன் இதை
அலெக்சாண்டரிடம் மெதுவாக
சொன்ன போது அவன் சிரித்தான்.
அடுத்த நாள்....
சாதாரண காய்ச்சல் தலைவலி
உடல் சோர்வு சற்று மயக்கம்
என்று துவங்கி....
ஒரு வாரத்தில்
அலெக்சாண்டரின்
உடல்நிலை
இவ்வளவு சீர்குலைந்து விடும்
என்று அவனுக்கு சிகிச்சை
அளித்த அவனது மருத்துவர்களே
நம்பவில்லை.
அந்த நிலையிலும்
தனது நோயின் காரணத்தை
மருத்துவர்களிடம் கேட்டு
தெரிந்து கொண்ட
மகா அலெக்சாண்டர்
நகைச்சுவையாக பேசியது
வரலாற்று ஏடுகளில் இன்றும்
கண்ணீர் சிந்த வைக்கிறது.
உலக நாயகன்
மகா அலெக்சாண்டர்
ஒரு சிறிய கொசுவால்
கடிபட்டு மலேரியா நோய்
கண்டு பரிதாபமாக இறந்து
போனான் என்று அவனது
மரணம் குறித்து சரித்திர
ஏடுகள் கூறினால் யார்
கண்ணில் தான் அழுகை வராது!
உலகின் அன்றைய பிரபல
மருத்துவர்கள் மேற்பார்வையில்
சிகிச்சை தொடர்ந்தும்....
அவன் உயிரை காப்பாற்ற
இயலவில்லை என்பது தான்
அவனது விதி போலும்!
Vavar F Habibullah
No comments:
Post a Comment