திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தின் முன்னால
25 நாட்களாக CAA , NRC, NPR சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கல்லூரி மாணவ மாணவிகள்
பெற்றோர்கள்
மூத்த குடிமக்கள்
அரசு அலுவலர்கள்
தொழிலாளர்கள்
சமூக ஆர்வலர்கள்
மூதாட்டிகள்
குழந்தைகளென எல்லோருமே வந்து
கலந்து கொள்ளக் கூடிய
ஒரு 24 மணிநேர இடைவெளியே இல்லாத அமைதிப் போராட்டமாக நடைபெற்று வருகிறது.
இன்று நானும் சிறிது நேரம் அவர்களோடு அந்த போராட்டத்தில்
கலந்து கொண்டேன்.
சுகுமாறனும்
ஜோசப் மேத்யூவும்
குஞ்சு மூசாவும்
சகஜமாக பேசிக்கொண்டும்
சாயா குடித்துக் கொண்டும்
பாசிசத்தின் பயங்கரங்களைப் பற்றி
பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
என்னையும் ஒரு சேரில் உட்கார வைத்து
சாயா தந்து உபசரித்தார்கள்
அங்குள்ள பெண்பிள்ளைகள்.
நாகர்கோயிலில் இருந்து வந்து
இந்த போராட்டத்தில் நானும் பங்கெடுத்துக் கொண்டதை எண்ணி
அவர்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம்.
" மக்களே .. நல்லதாயிட்டு ஒரு பாட்டுப் பாடணும். நான் அதை பேஸ்புக்கில் போடணும் .. " என்று சொன்னேன்.
" உப்பாயிக்கு வேண்டி நமக்கு பாட்டு படிக்காம் .." என்று அவர்கள் மீண்டும் சந்தோஷப்பட்டு பாடினார்கள்.
மிக அருமையான பாட்டு.
நானும் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் ஆகி
அவர்களோடு சேர்ந்து பயங்கரவாத பாசிச அரசை எதிர்த்து போராடியதுபோல் ஒரு மன நிறைவு.
" நிச்சயம் நம்மோட போராட்டம் ஜெயிக்கும் மக்களே .. ' என்று வாழ்த்தினேன்.
" உப்பா வாக்கை படச்சோன் கபூலாக்கட்டே .." என்று கூறி மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தார்கள்.
இறைவா ...
இந்த மக்களுக்கும் எங்களுக்கும்
கருணை காட்டு.
டில்லி மக்களுக்கு உன் உதவியை
உடனே அனுப்பு என்று மனம் கசிந்து பிரார்தித்தவனா
#வீடியோவை_கேட்டுப்_பாருங்க_மக்களே
No comments:
Post a Comment