by.Saif Saif
1912 ல் இத்தாலி லிபியாவைதுருக்கியிடமிருந்துகைப்பற்றியது.
இத்தாலி ராணுவம் லிபியா மக்களை கொடுமை படுத்துவதை
கண்டு பதைபதைத்து கொதித்தெளுந்தார்
அவர்..
இத்தாலியர்களை லிபியாவில் இருந்து அகற்றவேண்டும் என்று ஒரு பெரும் படையை அமைக்க துவங்கினார்.. அப்போது அவருக்கு வயதோ 60..
லிபியா விடுதலைக்கு உக்கிரமாக போராடியவர், இத்தாலி இராணுவத்திற்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.
கிட்டத்தட்ட 20
ஆண்டுகள் இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல் கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு வந்தவர் அவர்..
பெயர் கேட்டாலே லிபியா மக்கள் சிலிர்த்துப் போகின்ற அவர் வேறு யாருமல்ல..
#பாலைவன_சிங்கம் என்று அழைக்கப்படும்
#உமர்_முஃக்தார் தான்..
தொழில் ரீதியாக குரானை போதிக்கும் ஒரு சாதாரண பள்ளிக்கூட ஆசிரியர் தான் அவர்..
ஆனாலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர் தந்திரவாதியாக விளங்கினார்.
தன் இயக்கத்தினருக்கு இவரே ஆசானாக இருந்து கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார்.
பாலைவனங்களில் போர் புரியும் தந்திரங்களையும் அறிந்தவர்.
அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக பெனிட்டோ முசோலினியின் இத்தாலிய படை விளங்கியது.
எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.
இந்த பலவீனத்தை
பயன் படுத்தி
பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார்
உமர் முக்தார்..
இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிற்சியோ நவீன ஆயுதங்களோ, போக்குவரத்து சாதனங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கூட கிடையாது.
தணியாத சுதந்திர வேட்கையும், அந்நியரிடம் அடிமைப் படக் கூடாது என்ற வெறியும் இறைபற்றுதலும் தான் அவரை வழி நடத்தியது..
ஒரு கட்டத்தில் இவருக்கு பொது மன்னிப்பு தர இத்தாலி ராணுவம் தயாராக இருந்த போதும் இவர் அதை ஏற்று கொள்ளவில்லை..
காரணம் இவருடைய கொரில்லா படையினரும் சரணடைவதில் இவருக்கு விருப்பமில்லை..
"எங்கள் சுதந்திரத்திற்காக போராடும் நாங்கள் இறப்போம் அல்லது உயிர் விடுவோம் சரண் அடையும் பேச்சுக்கே
இடம் இல்லை"
என்று சூளுரைத்தார்...
பாலைவன சிங்கம் என அனைவராலும் புகழப்பட்ட, கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இத்தாலியின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்..
முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது, அவரது குழுவினர் அவரை தப்பித்து
போய் விடும் படி வற்புறுத்தியதையும் மறுத்து விட்டார்..
அப்போது குழுவினர் அவரிடம் சொன்னார்கள்..
"இத்தாலியிடம் விமானங்கள் ஏராளம் இருக்கின்றன. நம்மிடம் ஒன்று கூட இல்லையே.."
"அந்த விமானங்கள் அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் பறக்கின்றனவா அல்லது மேலேயா.!?"
" கீழே தான்.."
உமர் முக்தார் சிரித்து கொண்டே அவர்களுக்கு பதில் சொன்னார்..
"நம்மிடம் அர்ஷிற்கு மேலே உள்ளவன் இருக்கின்றான்.
அதனால் அதற்கு கீழே
உள்ளவைகள் பற்றி நமக்கு அச்சமில்லை."
என்று இறைவன் மேல் தவக்கல் வைத்தவர்..
இத்தாலியப் படை அவரை சலோக் நகரில், 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் சர்வதேச விதி முறைகளையும் மீறி, அவரது வயதையும் பொருட்படுத்தாமல் கைது செய்து பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 80.
கூடியிருந்த மக்கள்
கூட்டம் கண்ணீர் மழை பொழிந்தது..
சிறையில் சிறை அதிகாரி “ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை?” என்று
அவரிடம் கேட்ட போது..,
” ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவனாகவும் அதன்படியே நடப்பவனாகவும்
இருக்க வேண்டும்”
என்று பதில் சொன்னார் பாலைவன சிங்கம்
உமர் முக்தார்.
இந்த வரலாற்று சம்பவம் OMAR MUKHTAR
(Lion of the Desert) என்று
1980 ல் ஆங்கில திரைப்படமாக எடுக்கப்பட்டது..
அதில் உமர் முக்தாராக நடித்த ஆண்டனி குயின் என்ற நடிகர் படம் முழுவதும் உமர் முக்தாராகவே வாழ்ந்திருப்பார்..
பின்னாளில் இவர் இஸ்லாத்தை தழுவினார் என்பது தனி செய்தி..
#பின்குறிப்பு..
உமர் முக்தார் இறந்து
14 வருடங்கள் கழித்து
பாசிச சித்தாந்தத்தின் தந்தையான இத்தாலியின் சர்வாதிகாரியாகிய பெனிடோ முசோலினியின் ஆட்சியும் முடிவுக்கு வந்தது..
நாட்டில் வெடித்த
புரட்சியில் 1945ம் ஆண்டு
ஏப்ரல் 28ந்தேதி, முஸோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன்
சுவிட்சர்லாந்துக்குத்
தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில்
புரட்சியாளர்களால் இருவரும் சுட்டு கொல்லப்பட்டனர்.
29 ந்தேதி முசோலினி மற்றும்
அவர் மனைவி கிளாரா பெட்டாசியின் உடல்களும் மிலனில் உள்ள பியஜேல் லொரெட்டோ விற்கு எடுத்துசெல்லப்பட்டு தலைகீழாக எரிவாயு நிரப்பும் நிலையத்தின் கூரையிலுள்ள இறைச்சியை தொங்கவிடும்
கொக்கியில் மாட்டித் தொங்கவிடப்பட்டது..
இந்த செயல்களின் நோக்கம் பாசிசவாதிகளை அச்சுறுத்துவதற்காகவும், இதற்கு முன் புரட்சியாளர்களை இக்கொடுரமான முறையிலேயே முசோலினியும் அந்த நாட்டு அதிகாரிகளும் செய்ததற்கு
பழிவாங்கும் நோக்கில் தொங்கவிடப்பட்டதும்
என தெரிகிறது..
தொங்க விடப்பட்ட உடல்கள் மீது அங்கு வாழும் மக்கள் கற்களைக்கொண்டு அடித்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்து கொண்டதாகவும்
வரலாற்று பக்கங்களில் காணப்படுகிறது..
No comments:
Post a Comment