ஆனால், ஆண்களை போலவே பெண்களாலும் சாதிக்க முடியும், கனவை நினைவாக்க முடியும், லட்சியத்தை அடைய முடியும்... இதற்கு வயதோ, குடும்பமோ, குழந்தைகளோ தடையாக இருப்பதில்லை... என்பதை, தன் வாழ்க்கையின் வழியே நிரூபித்திருக்கிறார் பிருந்தா.
யெஸ், 35வது வயதில் கராத்தே கற்க ஆரம்பித்த இவர், இன்று அதில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார்.
சிறுவயதில் ஏற்பட்ட தனிமையுணர்வு இவரை கவிஞராக்கியது என்றால் -
மகளுக்கு வித்தை கற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அலைந்த அலைச்சல், இவரையே வீராங்கனையாக்கியிருக்கிறது.
குழந்தைப் பருவம் முதல் அம்பைக்கு Lakshmi Chitoor Subramaniam உதவியாளராக பணிக்கு சேர்ந்தது தொடங்கி தன் இலக்கை அடைந்த இன்றைய நிலை வரை சகலத்தையும் மனம் திறந்து பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
வரும் ஞாயிறு (08.06.2014) 'தினகரன்' நாளிதழுடன் வெளியாகும் 'தினகரன் வசந்தம்' இணைப்பிதழில் பிருந்தாவின் பேட்டியை வாசிக்க மறக்காதீர்கள்...
வயது, கமிட்மெண்ட் காரணமாக தொலைந்து போன உங்கள் கனவையும், லட்சியத்தையும் நீங்கள் மீட்டெடுக்க ஒருவேளை இந்தப் பேட்டி உதவலாம்.
COMING SUNDAY Brindha Sethu DAY
No comments:
Post a Comment