செருப்புகள் அணியக்கிடைத்த காலத்தில் மிகச்சுமாரான தரமுள்ள செருப்பென்பதால் தன் துளையிலிருந்து மீண்டும் மீண்டும் வெளிவந்துவிடும் வாருக்கு பின்னூசி குத்தி சரிசெய்ய முயல,அது பலனளிக்காமல் மீண்டும் வெளிவந்துவிடும் வாரை பின்பக்கம் ஒரு இரும்பு வாசர் வைத்து சரிசெய்ய முயன்றது மட்டுமல்லாமல் வேகமாக நடந்தால் எங்கே பிய்த்துக்கொண்டு வெளியே வந்துவிடுமோ என்கிற பயத்தில் பையப்பைய அடிமேலடி வைத்து நடந்து பழகிய எளிய வாழ்விலிருந்து வந்தவன் என்பதாலும்
உங்கள் அப்டேட் ஃபேஷனின் பாவனைகள்
நுழைய மறுக்கின்றன எனக்குள்.
ஜீன்ஸ் அணியும்போது ஒருவிதமான செருப்பும்,
ஃபார்மல் பேண்ட் அணிகையில் இன்னொரு விதமான செருப்பும் வேட்டி கட்டும்போது வேறுவிதமான செருப்பும் ஹாலிடே டூரின்போது வேறு வித்யாசமான செருப்பும் அணியும்/அணிய வற்புறுத்தும் உங்கள் மேல்தட்டு மனோபாவம் அன்னியப்படுத்துகிறது என்னை...!!
No comments:
Post a Comment