Monday, June 30, 2014

ஹிப்னோஸிஸ் கற்போம்-பகுதி1!

ஹிப்னோஸிஸ் கற்போம்-பகுதி1!
உடலியல் (Physiology) அல்லது அறிவியல் (Science) கண்ணோட்டத்தில் ஹிப்னோஸிஸ் (HYPNOSIS) - டாக்டர் யூசுஃப் ஆதம்!

ஹிப்னோசிஸ் ஒரு மாயாஜாலம் இல்லை; அது ஒரு உளவியல் மருத்துவம்! மனோதத்துவ மருத்துவ துறையின் சமீபக்காலத்திய மிக முக்கிய அறிவியல் கண்டுப்பிடிப்பு!

அதைப்பற்றி பல மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்தலில், "ஹிப்னோசிஸ் என்பது மனிதனின் சராசரி உடலியல் செயல்களில் ஒன்றுதான். ஒவ்வொரு நாளும்  மனிதனின் மூளையின் இயக்கம்  விழிப்பு நிலைக்கும், தூக்க நிலைக்கும் மாறி மாறி  வரும். இது தினந்தோறும் நடக்கும். இரு உடலியல் நிலைகளான விழிப்பு நிலை, ஆழ்ந்த தூக்க நிலை இவைகளுக்கு நடுவில் உள்ள ஒரு சிறு நிலையே ஹிப்னோசிஸ் என்ற அறிதுயில்" என்கிறார்கள்.


மூளையின் செயல் ஆற்றலை மதிப்பிட மருத்துவர்கள், EEG என்ற Electro Enchepalo Graphy (EEG) யைப் பயன் படுத்தி அதன் ஓட்டத்தை அளவிடுகிறார்கள். EEG என்பது ஒரு மின் மருத்துவக்கருவி. இது மனிதமூளையின் நரம்பு செல்களில் (Neurons) உருவாகக்கூடிய Electric potential (மின் அழுத்தம்)களின் மாற்றங்களை அளவிடக்கூடியது. இதைக் கொண்டு மூளையின் வேலைத்திறனையும், இயக்கங்களையும், தூக்கத்தின் நிலைகளையும் அளவிடலாம். பொதுவாக EEGல் பதியக்கூடிய Electro Potential Waveகளை நான்கு விதமாக பிரிக்கிறார்கள். அவை வருமாறு:

1.    பிட்டா அலைகள் (Beta Waves)
2.    அல்பா அலைகள் (Alpha Waves)
3.    டிட்டா அலைகள் (Theta Waves)
4.    டெல்டா அலைகள் (Delta Waves)

அன்றாட வாழ்க்கைகளில் மனித மூளையில் ஏற்படும் எண்ண அலைகளையே EEG என்ற கருவி அளவிடுகிறது. இந்த எண்ண அலைவரிசைகளை Wavelength என்பர். Wavelengthகளின் எண்ணிக்கைகளை வைத்துதான் மூளையின் அலைகளைப் பிரிக்கிறார்கள். அவைகளைப் பற்றி விரிவாக காண்போம்.

1) பிட்டா அலை நிலை (BETA BRAIN-WAVE STATE) (14-30 cps):  இது பொதுவாக 14 முதல் 30 வரை அலைகளைக்(Waves) கொண்டது. சாதாரணமான, விழித்த, முழுமையான உணர்வுள்ள(conscious activity of the brain) மூளையின்   ஒரு சராசரி நிலையாகும். சராசரியாக தினமும் 16 மணி துளிகள் மனிதன் இந்த நிலையில் இருப்பான். பிட்டா அலை நிலையில் மனிதனின் மூளையின் திறன்  முழுமையான உஷார்நிலையாகவும், உடல் செயல்பாடுகளில் முழு திறனும், உணர்ச்சிகளான கோபம், கவலை, துக்கம், பயம் போன்ற மனம் சார்ந்த செயல்களும், கட்டுக்கடங்காத உடல் இயக்கங்களான unconditional reflex போன்றவைகளும் இயல்பாகவே நடக்கும். இந்த நிலையில் ஹிப்னோஸிஸ் செய்யப்பட்டால், மூளை தன்னை இந்த பிட்டா அலை நிலையில் இருந்து அடுத்த அலை நிலையான அல்பா(Alpha) நிலைக்கு மாற்றும்.

2) அல்பா அலை நிலை (ALPHA BRAIN-WAVE STATE) (8-13 cps):  இது பொதுவாக 8 முதல் 13 வரை அலைகளைக்(Waves) கொண்டது. இந்த நிலை மனித உடல் ரிலாக்ஸ், அதாவது தளர்வு அடைவதில் இருந்து தொடங்குகிறது(The alpha state is state of beginning of relaxation). EEG வரைப்படத்தில் இந்த அல்பா அலைகள் உயர் அதிர்வெண் (high frequency) மற்றும் குறைந்த வீச்சு (low amplitude) கொண்டு இருக்கும். இந்த நிலையில் மூளை முழு ரிலக்ஸாகவும், அதே நேரத்தில் விழிப்பாகவும் இருக்கும். இந்த அல்பா அலை நிலையில் உடல் தளர்வு, மனம் தளர்வு, சுயமாக செயல் படமுடியாத விழிப்புணர்வு மற்றும் மன அமைதி போன்ற உளவியல் தன்மைகளும், உடலியல் தன்மைகளும் கொண்டிருக்கும். மன அமைதி, நல்ல உணர்வு, இன்பமான நிலை போன்ற உணர்ச்சி பூர்வமான உணர்வுகளும் இந்த அல்பா அலை நிலை ( State of Alpha Wave)ல் இருக்கும். ஹிப்னாஸிஸ் (Hypnosis), தியானம் (Meditation), பகல் கனவு (day dreaming), awakening, biofeedback போன்ற உள்ளம் சார்ந்த செயல்களும்  இந்த அல்பா  எண்ண அலையில் ஒத்திருக்கும்.

3) டிட்டா அலை நிலை (THETA BRAIN-WAVE STATE) ( 4-8 cps): இது பொதுவாக 4 முதல் 8 வரை அலைகளைக் (Waves) கொண்டது. இது மன அமைதி, நிதானமான மற்றும் மிகவும் ஆழமான ரிலாக்ஸான மன நிலையாகும். சிறு தூக்கம், Rapid Eye Movement- REM Sleep போன்ற உடலியல் நிகழ்வுகளில் இந்த டிட்டா எண்ண அலை தான் இருக்கும். இந்த நிலைகளிலும் ஹிப்னோசிஸ் என்ற செயல்கள் நடைப்பெறச்செய்யலாம்.

4) டெல்டா மூளை அலை (DELTA BRAIN-WAVE STATE) (.05-4 ccps): இது பொதுவாக .05 முதல் 4 வரை அலைகளை (Waves) கொண்டது. இது ஆளமான தூக்க நிலை(Deep Sleep)யாகும். இந்த நிலையில் மூளையில் எந்த விஷயத்தைப் பற்றிய உணர்வும் இருக்காது. Non Rapid Eye Movement (NREM) sleep-ம் இந்த நிலையைச் சார்ந்தது. இந்த நிலையில் Hypnosis செய்ய முடியாது.

மனிதன் காலையில் தூக்கத்தில் இருந்து எழும் சமயம் அவனின் Electo Enchepalo Graphy (EEG)யில் Brain wave அல்பா-Alpha நிலையில் இருந்து பிட்டா- Beta நிலையான விழிப்பு நிலைக்கு வரும். அதே சமயம் இரவில் உறங்க செல்லும் சமயம் Beta wave நிலையில் இருந்து Alpha நிலைக்குச் சென்று பிறகு Theta, Delta நிலையில் மாறிமாறி வரும். அதாவது REM SLEEP, NREM SLEEP மாறிமாறி வரும். இவ்வாறு தான் மனிதனின் மூளை இயங்குகிறது.

ஹிப்னாஸிஸ் (Hypnosis) என்பது மனதின் அல்லது உள்ளத்தின் உள்ள ஓர் இயற்கையான நிலையாகும். இது தூக்கநிலை போன்ற நிலையும் இல்லை. ஒருவன் ஹிப்னாஸிஸ் செய்யப்பட்டால், அவன் தாம் ஹிப்னாஸிஸ் செய்யப்பட்டிருக்கிறோம் என நன்றாக உணர முடியும். அதாவது அறிவோடு கூடிய தூக்கம் போன்ற நிலை தான் ஹிப்னாஸிஸ் (Hypnosis). ஹிப்னாஸிஸ் நிலையில் மூளையின் எண்ண அலை (Brain wave) அல்பா-Alpha wave நிலையில் இருக்கும். வெளி மனதிற்குரிய (Conscious mind) உணர்வுகளுடன், உள்மனம் (Subconscious mind) உணர்வுகளும் இருக்கும். அதாவது வெளிமனம் உள்மனம் இவை இரண்டு உணர்வுகளும் இருக்கும். மூளையின் உணர்வு நிலை அல்பா-Alpha நிலையை ஒத்து இருக்கும். அதாவது முழு விழிப்பு நிலை(Full Conscious awake), இவற்றுடன் மூன்று விசயங்கள் ஒத்திசைய அமையவேண்டும். அதாவது:

1.    100% விழிப்பு (அ) கவனம் நிலை

2.  உடலிலுள்ள அனைத்து தசை (Muscles)கள் ரிலாக்ஸாக இருக்கவேண்டும்.(இந்த நிலையில் ஹிப்னோஸிஸ் செய்யப்படுபவர் தம் உடல் இலேசாகவும், மிதப்பது போல் சிறிது Warm ஆகவும் உணர்வார்)

3.    உடனடியாக தம் உடலை  அசைக்க முடியாது ( Complete and sudden immobility)

இந்த நிலையை சரியாக கூறவேண்டும் என்றால் Laughing gas என்ற Nitrous Oxide-ஐப் பல் மருத்துவரோ அல்லது அறுவை சிகிச்சை மருத்துவரோ பயன்படுத்தினால் எப்படி இருக்குமோ அதே நிலைதான் ஹிப்னாஸிஸ்(Hypnosis) என்ற அறிதுயில். இந்த ஹிப்னாஸிஸ் நிலையைப் பற்றி இப்படியும் விவரிக்கலாம்:

அதாவது அதிகப்படியான கவனம் அல்லது விழிப்பு நிலை(Increased concentration)யில், எல்லா உடல் தசை(Muscle)கள் ரிலாக்ஸ்(Complete body relaxation)ஆக இருக்க, உடலை உடனடியாக இயக்க இயலாமை (lack of movement); ஆனால் தொடு உணர்வு, செவி உணர்வு, நுகர் உணர்வு நன்றாக இருப்பது.  மூளைக்குச் செல்லக்கூடிய உணர்வுகள் விழிப்புடனும், மூளையில் எந்த ஒரு எண்ணமும் இல்லாமலும், மூளையில் இருந்து வெளியே வரக்கூடிய எந்தக் கட்டளைகளையும் (Motor impulse) செயல்படுத்த இல்லாத நிலைதான் ஹிப்னாஸிஸ் என்ற அறிதுயில் ஆகும். மேலும் இதில் எவ்வகையான அன்னிச்சை செயல்களும் (Unconditional reflex) நடைப்பெறாது. இவைகளுடன் Autonomic Nervous System என்ற தன்னார்ந்த நரம்பு மண்டலமும் ஹிப்னாஸிஸ் நிலைக்குச் சில சமயம் கட்டுப்படுகிறது.

அடுத்த பாகத்தில் ஹிப்னோஸிஸ் உடலியல் மருத்துவமாக எப்படி பயன்படுகிறது என்று பார்ப்போம்.

- டாக்டர் யூசுஃப் ஆதம்

இரண்டாம் பாகம்
Source: http://inneram.com

No comments: