பெண்களின் கனவுகள், லட்சியங்கள், சாதிக்கத் துடிக்கும் ஆசை... இத்யாதி இத்யாதி எல்லாம் வேலை, திருமணம், குழந்தை என்று ஆன பிறகு கரைந்து விடுகிறது. தங்களைத் தாங்களே சமாதானப்படுத்தி கொண்டு சின்ன வட்டத்துக்குள் சுருங்கி விடுகிறார்கள். இதுதான் பெரும்பாலான பெண்களின் நிலை.
ஆனால், ஆண்களை போலவே பெண்களாலும் சாதிக்க முடியும், கனவை நினைவாக்க முடியும், லட்சியத்தை அடைய முடியும்... இதற்கு வயதோ, குடும்பமோ, குழந்தைகளோ தடையாக இருப்பதில்லை... என்பதை, தன் வாழ்க்கையின் வழியே நிரூபித்திருக்கிறார் பிருந்தா.
யெஸ், 35வது வயதில் கராத்தே கற்க ஆரம்பித்த இவர், இன்று அதில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார்.
சிறுவயதில் ஏற்பட்ட தனிமையுணர்வு இவரை கவிஞராக்கியது என்றால் -
மகளுக்கு வித்தை கற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அலைந்த அலைச்சல், இவரையே வீராங்கனையாக்கியிருக்கிறது.
