Tuesday, June 17, 2014

மாமியாரா ! மருமகளா


குறையை மட்டும் குடையும்
அன்பு மாமியார்…

பிழைகளுக்கு வலைப்பின்னி;
வறுத்தெடுக்கும் மாமியார்;
குறை சொல்வதே
முறையென – முரைத்து
பிழையை மட்டும்
படம் போட்டு காட்டும்;

விடிந்ததிலிருந்து
விழி சோர்வுறும் வரை;
அடுப்பங்கரையிலே
அழகுப்பார்க்கச் சொல்லி;
அசதியில் உடல் அசைவுகள் மெலிந்து;
அசதிக்காக படுக்கும்பொழுதெல்லாம்
வசதியாக வறுத்தெடுக்கிறார்!

தொட்டாலும் குற்றம்;
விட்டாலும் குற்றமென
குடைந்து எடுக்கும் மாமியாரிடம்
மெல்லமாய் இனி காது
கடிக்கதான் வேண்டும்;

சீதனத்தோடு சீதனமாக
பஞ்சையும் கேட்டிருக்கலாம்
என் வீட்டில்….
நான் பொறுமைசாலிதான்;
என் செவி சவ்வுகள் இல்லை;

ஸ்ஸ்ஸ்ப்ப்பா தலை வலிக்குது!!
என் பக்கம்
  
Yasar Arafat

No comments: