Wednesday, June 25, 2014

இது ஒரு 'ஸ்பெசல் மாம்பழம் ' சுவையோ! சுவை!

மாம்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்
மாம்பழத்தில் பல வகை உண்டு
மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது.
மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது.
இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் அதனை அளவோடு சாப்பிட வேண்டும்
அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு வந்து விடும்
மாம்பழத்தில் இனிப்பும் அதிகமாக இருப்பதால்
மாம்பழத்தை  சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வார்கள்

மயிலாடுதுறை பாதிரியார் ஒரு புது வகை மாம்பழத்தை உருவாக்கினார்
அதனால் அந்த மாம்பழத்திற்கு' பாதிரி மாம்பழம்' என்ற பெயர் வந்து விட்டது 
இது மயிலாடுதுறை பக்கத்தில் மட்டும் உற்பத்தி செய்யப் படுகின்றது
' பாதிரி மாம்பழம்'  மிகவும் சுவையானது .

எனது நண்பர் வாலாஜாபாத் தோட்டத்தில் ஒரு புது மாம்பழம் இருந்தது .
அதிலிருந்து பல மாம்பழங்களை எனது நெருங்கிய நண்பர் திரு .தாஸ் எனக்கு தந்தார்
அதனை எங்கள் ஊர் நீடூருக்கு கொண்டு வந்து சாப்பிட்ட பின் அதன் கொட்டைகளை
எரு குழியில் போட்டு விட்டோம்
தூக்கி எறிந்தது முளை விட்டு செடியாகி பெரிய மரமாக வளர்ந்து நிறைய பழங்களைத் தருகின்றது

இது ஒரு 'ஸ்பெசல் மாம்பழம் '
இதன் சுவையோ தனி சுவை .
புளிப்பு இருக்காது .
இதனை பலருக்கு கொடுத்தேன் .அதனை சாப்பிட்டவர்கள் அனைவரும் மகிழ்ந்து தங்களுக்கு ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டுமென விரும்புகின்றார்கள் .இம்மாதிரி  'ஸ்பெசல் மாம்பழம் '  இப் பக்கமே கிடையாது











)
தாஸ் மகன்,நான்(முஹம்மது அலி) ,தாஸ்

3 comments:

வே.நடனசபாபதி said...

பாதிரியார் ஒருவர் இந்த மாம்பழத்தை உருவாக்கினாரா எனத்தெரியவில்லை. இந்த பழம் ஒரு பாதிரியார் பங்களாவில் இருந்த மரத்தில் காய்த்த பழம் என்பதால் இதை பாதிரி மாம்பழம் என்று சொல்வோரும் உண்டு. நீங்கள் சொன்னதுபோல் இந்த பழத்திற்கு தனி சுவை உண்டு. இது மயிலாடுதுறை சீர்காழி ஆகிய இடங்களில் கிடைக்கிறது. சில இடங்களில் 60, 70 ஆண்டுகள் வயதுள்ள மரங்களும் உண்டு. பாதிரி மாம்பழம் பற்றிய தகவலுக்கு நன்றி.

mohamedali jinnah said...

திரு.வே.நடனசபாபதி அவர்களுக்கு மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் மற்றும் உங்கள் கருத்துரைக்கும்
பாதிரி மாம்பழம் பற்றிய உங்கள் கருத்துரையைப் பார்க்க தாங்கள் மயிலாடுதுறை பக்கம் என்று அறிகின்றேன் .நானும் மயிலாடுதுறை பக்கம் நீடூரை சார்ந்தவன் .
அன்புடன்

வே.நடனசபாபதி said...


வணக்கம் திரு முகம்மதுஅலி ஜின்னா அவர்களே! நான் மயிலாடுதுறை மாப்பிள்ளை. எனது சகோதரிகள் வாழ்க்கைப்பட்ட ஊர்கள் சீர்காழியை அடுத்த புதுத்துறை, மற்றும் மாதானம், மயிலாடுறையை அடுத்த உளுத்துக்குப்பை, ஆகும். புதுத்துறையில் உள்ள எனது மூத்த சகோதரி வீட்டில் ஒரு பாதிரிமரம் இருந்தது. அதனால் எனக்கு அந்த பழத்தின் சுவையும் அருமையும் தெரியும்.