முகநூலில் பிரபலமானவர்களுக்கே லைக் விழுகிறது என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் ஆரம்பத்தில் முகநூல் வந்த போது எனக்கு கிடைத்த லைக் ஒன்றுதான். அதுவும் நானே போட்டுக்கிட்டதுதான். பின் என் கருத்துக்களுக்காக அந்த ஒன்று ஐந்தானது. ஐந்து பத்தானது. பத்து இருபதானது. இருபது ஐம்பதானது. ஐம்பது நூறானது. நூறு நூற்றம்பதாகியுள்ளது. பிரபலங்களுக்குத்தான் லைக் என்றால் என்னை ஒன்றிலிருந்து நூற்றம்பது லைக்கிற்கு உயர்த்தியது எது?, லைக் என்பது ஆரம்பத்தில் கருத்துக்கு விழுகிறது. அதுவே பிரபலப்படுத்துகிறது. ஒன்று வாங்கும் போது பிரபலமில்லை நான். அதுவே நூற்றம்பது லைக் வாங்கும்போது பிரபலமாக அறியப்படுகிறேன் என்றால் என் பதிவால் மட்டுமே. அந்த பதிவே அத்தனை லைக்கை கொண்டு வருகிறது.
இப்போது நான் ஓரளவு முகநூலில் அறியப்படுவதால் என் எல்லா பதிவுகளும் 150 லைக்கை எட்டுவதில்லை. இன்று காலையில் நான் போட்ட பதிவு ஒன்று இந்த நிமிடம் வரை 100 லைக்கை எட்டவில்லை. அதே நேரம் சில பதிவுகள் ஒரு மணி நேரத்திற்குள் 100 லைக்கை வாங்கிவிடுவதும் உண்டு. பிரபலமானால் எல்லா பதிவுகளுக்குமே நூற்றுக்கணக்கில் லைக்ஸ் கிடைக்கும் என்றால் என் எல்லா பதிவுகளுக்கும் அப்படி கிடைத்திருக்கனுமே. அப்புறம் ஏன் முக்கனும்?,
முகநூலை பொறுத்தவரை லைக்ஸ், பிரபலம் என்பதெல்லாம் மாயை.
ரஹீம் கஸாலி
****************************************************************************
அண்ணன் ரஹீம் கஸாலி அவர்கள் எழுதிய,ஒவொருவரும் திரும்பத் திரும்ப படிக்க வேண்டிய கஸாலித்துவம் என்ற சிறந்த புத்தகம் இப்பொழுது என் கையில்....
ரஹீம் கஸாலிக்கு வாழ்த்துகள்
ரஹீம் கஸாலி என்று தன தந்தையின் அன்பிற்கு பிரதியுபகாரமாய் தந்தையின் பெயரான ரஹீம் என்ற பெயரை தன் பெயரோடு ரஹீம் கஸாலி என்று இணைத்து வைத்துள்ளார்.
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
No comments:
Post a Comment