Saturday, May 31, 2014

வாடகைக்கு இருக்கும் வீட்டில் ..!(நடந்த ஒரு உண்மை சம்பவம்)

நான் ஒரு இரண்டு வருடகாலமாக ஒரு சீன பெண்மணி வீட்டில் வாடகைக்கு இருந்து வருகின்றேன்.
அந்த வீட்டில் நான்கு அறைகள் இருக்கின்றன.
அதில் ஒரு அறையை மட்டும்  நான் வாடகைக்கு எடுத்து இருக்கின்றேன். மற்ற  "ரூம்"களுக்கு யாரும் குடி வரவில்லை.
எனக்கு  வாடகைக்கு  இடம் தந்துள்ளவர் ஒரு சீன 85 வயது வந்த மூதாட்டி. அச் சீன மூதாட்டிக்கு பிள்ளைகள் இல்லை. கணவரும் இறந்து விட்டார்.  அம் மூதாட்டி மட்டும் தான் .
அம் மூதாட்டி தனது  உறவினர்  விட்டில் கோலாலம்பூரில் தங்கிக் கொண்டு  தனக்குள்ள  ஐந்து வீடுகளையும் வாடகைக்கு விட்டு  அதில் வரும் வருமானத்தை வைத்து தனது வாழ்வை மகிழ்வாக கழித்து வருகின்றது  அந்த ஐந்து விட்டில் ஒரு விட்டில் தான் நான் வாடகைக்கு இருக்கிறேன்.

 கோலாலம்பூரிலிருந்து நான் இருக்கும் இடத்திற்கு  அந்த சீன பெண்மணி வந்திருந்தது.
 நான் எனது சொந்த கடையில் வேலையாக இருக்கும் போது எனது கடைக்கும் வந்தது.

வந்த உடன் என்ன (தவ்கே) நலமா என்றது..? (தவ்கே அப்படி என்றால் முதலாளி என்று அர்த்தம் )
நானும் யா (அஸ்சோ) நலம் என்று சொன்னேன்.
அஸ்சோ என்றால் வயதான பெரிய மனுசி என்று அர்த்தம் ..
அந்த சீன  மூதாட்டி மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் இங்கே வரும்.
தனது  வீடு பாதகம் இல்லாமல் இருக்கிறதா என்று  பார்த்து விட்டுப் போக வரும்  
அப்படி வந்தால் இங்கே ஒரு மூன்று அல்லது நான்கு நாட்கள்  ஒரு தனி அறையில் தங்கி விடும்.
 பிறகு அது அவர்கள் உறவினர்  விட்டுக்கு போயிவிடும்
அது வந்தால் என்னை காட்டிலும் அது வாய் சும்மாவே கிடக்காது.
 தொன,தொன என்று எதையாவது சொல்லிகிட்டே கிடக்கும்.
 எனக்கு ஆதிரமாகதான் வரும் என்ன பண்றது நான் இருப்பது அது வீடாச்சே அதனால் நான் எல்லாத்துக்கும் ம்ம்ம் ம்ம்ம் இப்படியே தலையை ஆட்டிகிட்டே போயிடுவேன் ..
பிறகு  அம மூதாட்டியும் 'கம்முண்டு' தனது அறைக்கு ஓய்வெடுக்க போய் விடும்.
'அப்பாடா'  என்று நானும் அமைதியாகி  விடுவேன் ..
நான் எப்போதும் என் அறையில்தான் படுப்பேன்
ஆனால் ஒரு வாரமாக என் ரூம் சரியான அனத்தளாக இருந்ததால் சரி இனி கொஞ்ச நாளைக்கு ஹாலில் படுப்போம் என்று ஒரு வாரமாக ஹாலில் படுக்கிறேன் .
இந்த நிலையில் ..நேற்று இரவு நடுநிசியில் சரியாக மணி ஒரு மூன்று இருக்கும் நான் ஹாலில் படுத்து தூக்கிக் கொண்டிருந்தேன் .
அப்போது அந்த இருட்டு நேரத்தில்  என்னை யாரோ 'தவ்கே தவ்கே' (தவ்கே என்றால் முதலாளி) என்று என் காலில் தட்டி எழுப்புவது போல் இருந்தது.
 நான் அப்படியே பயந்து போயிட்டேன்.
 யார் டா இந்த நேரத்தில் நம்மை  வந்து எழுப்புகிறார்கள் என்று திடீர் என்று கண் விழித்து பார்த்தால் அந்த மூதாட்டி நிற்கிறது. 
அந்த இருட்டுக்குள்ளே நான் உடனே என்ன 'அஸ்சோ' (நலமா) என்று கேட்டேன் தடிப்பான குரலில் 
அது திடீர் என்று ' ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல' என்று திரும்பவும் அது அறைக்கே போய்விட்டது
எனக்கு சரியான ஆத்திரம் நம்ம நிம்மதியா கூட தூங்க முடியாமல் கெடுத்து விட்டதே  என்று

 நானும் அப்படியே எழுந்து  கை கால் கழுவிவிட்டு தண்ணீரை கொஞ்சம் குடித்து விட்டு மறுபடியும் வந்து படுத்தேன் ..அப்புறம் எனக்கு தூக்கமே வர வரவில்லை.
 சரி இருக்கட்டும்! அந்த சனியனுக்கு காலையில் வச்சுகிடுவோம் கச்சேரிய என்று மறுபடியும் தூங்கிட்டேன்.

பொழுது விடிந்த உடன் அது ரூமில் இருந்து வந்தது.
 நான் போய் 'ஏன் அஸ்சோ நான் தூங்கும் போது என்னை ஏன் எழுப்பினே' என்று கேட்டேன்.
 அதுக்கு அந்த கிறுக்கு சீன பெண்மணி சொல்கிறாள்..
'அது ஒன்னும் இல்ல தவ்கே நான் கனவு கண்டேன் அதான் உன்னை வந்து எழுப்பிட்டேன். சாரி! என்று சொன்னாள்

அடி கிறுக்கு மொட்டையக்கா என்று என் மனசுக்குள் நினைத்து கொண்டேன் .

சரி நீ என்ன அப்படி கனவு கண்டே என்று கேட்டேன்
அதுக்கு சீனபெண்மணி சொன்னது 

'என்னை யாரோ கழுத்தை பிடித்து நெரிப்பது  போல் கனவு கண்டேன் அதான் அந்த பயத்தில் உன்னை வந்து எழுப்பி விட்டேன்' என்று
.ஓஒ அப்படியா என்று கேட்டுக்கொண்டேன் .
.பிறகு நான் சொன்னேன் 'உனக்கு இனி இந்த மாதரி கனவே வராமல் இருப்பதுக்கு ஒரு ஐடியா சொல்லவா' என்று கேட்டேன் '

அந்த பெரிய மனுசி ஆர்வமாக 'சொல்லு சொல்லு' என்று என்னை கேட்டது .
.பிறகு நான் சொன்னேன்
 'அது ஒன்னும் இல்ல உன்னிடம் ஐந்து வீடு இருக்கு அதில் ஒரு வீட்டை நீயே வச்சுக்கோ மீதி நான்கு வீட்டை என் பேருக்கு எழுதி கொடுத்து விடு இனி உனக்கு எந்த காலத்திலும் இப்படிப்பட்ட கனவே வராது' என்று சொன்னேன்.
அதுக்கு அந்த பெரிய மனுசி என்னை அப்படியே ஒரு பார்வை பார்த்தாள் பாருங்க ...கொஞ்சம் அங்கே நின்று இருந்தால் என் கழுத்தை பிடித்து நெரித்திருக்கும் ...நான் பிறகு கடைக்கு ஓடி வந்து விட்டேன் .

#நான் பெரிய மனுசியிடம் இப்படி கேட்டது தப்பா நீங்களே சொல்லுங்க இந்த நியாயத்தை .
.ஹா ஹா ஹா
 
 ஜப்பார் அரசர்குளம்

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல்!பகிர்வுக்கு நன்றி!