Vavar F Habibullah
தித்திக்கும் தீந்தமிழ் சாறெடுத்து
அதில் இறைமறை தேன் கலந்து
தமிழ் உலகுக்கு, தான் வாழ்ந்த
காலம் வரை,அயராது அருசுவை
தமிழ் விருந்து படைத்து மகிழ்ந்த பெருந்தகை,பேராசிரியர் அப்துல்
கபூர் அவர்கள்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள்...
நான் நல்ல தமிழில் எழுதவும்
பேசவும் இவரே முழுக்க காரணம்.
தக்கலையில் நான் வாழ்ந்த காலம்
மறக்க முடியாதது.
80-களின் துவக்கத்தில்
என் வீட்டுக்கு அடுத்த
வீட்டிலேயே பேராசிரியர்
வாழ்ந்துவந்தார்.வந்த புதிதில்
இவரை பற்றி எனக்கு அதிகம் தெரியாது.ஓய்வுபெற்ற ஒரு பேராசிரியர்
என்றே எண்ணியிருந்தேன்.
ஒரு நாள் மாவட்ட ஆட்சியரிடம்
இருந்து எனக்கு ஓரு போன் வந்தது.
கலக்டரே நேரடியாக பேசினார்.
‘டாக்டர்,உங்களுக்கு
புரபஸர்.கபூர்
அவர்களை தெரியுமா!’
‘நான்...தெரியும் சார்..
என்ன விஷயம்
He is my neighbour..’
‘ஓரு ஹெல்ப் தேவை டாக்டர்!
அரசு சார்பில்
நடக்க இருக்கும் அண்ணா பிறந்த
நாள் விழாவில் சிறப்பு பேச்சாளராக
கலந்து கொள்ள அவர் சம்மதம்
வேண்டும்.அவர் இப்போது பொது
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை
என்று கேள்வி பட்டேன்...
can you help...please talk
to him and get his conscent’
தக்கலை சப் கலக்டரை
அழைத்து கொண்டு
பேராசிரியரை அவர்
வீட்டில் சென்று பார்த்தோம்.
மிகுந்த வற்புறுத்தலுக்கு பிறகே
சம்மதம் தந்தார்.புகழ்பெற்ற
நடமாடும் தமிழ் கலைக் களஞ்சியம்
ஓன்று என் வீட்டுக்கு அருகில்
குடி இருப்பதை அப்போது தான்
நான் உணர்ந்தேன்.
சில நாட்களில் நாங்கள்
நல்ல நண்பர்களாகி விட்டோம்.
அவ்வப்போது தமிழ் அமிழ்து
அருந்தி மகிழ,நான் அவர்
இல்லம் செல்வதுண்டு.
ஓரு சிறந்த நூலகத்தை அவர்
வீட்டில் பரிபாலித்து வந்தார்.
அவர் எழுதியபல நூல்களை
எனக்கு பரிசாக தந்து
மகிழ்ந்தவர் அவர்.
சென்னையில் அவர் முதல்வராக
இருந்து வழி நடத்திய கிரசண்ட்
ஸ்கூல் போன்ற ஓன்றைஅவர்
பிறந்த ஊரில் நிறுவ மிகுந்த
ஆசை கொண்டிருந்தார்.
தலை சிறந்த தமிழ் அறிஞர்
என்ற போதும் எளிமையின்
சிகரமாக விளங்கியவர்,
வாழ்ந்து காட்டியவர்.
ஓருமுறை எனது வீட்டில்
நடந்த ஓரு நிகழ்ச்சிக்கு இவரை
அழைத்து இருந்தேன்.அப்போது
எம்ஜிஆர் அமைச்சரவையில்
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த திருச்சியார். ஆர்.சவுந்தரராஜன்
உட்பட பல பிரமுகர்கள் நிகழ்ச்சியில்
கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் போது
மேடையில் இருந்த அமைச்சர் திடீர்
என எழுந்து கூட்டத்தினர் மத்தியில்
விரைந்து சென்றார்.வேகமாக
சென்ற அவர் ஒரு ஓரத்தில்
அமைதியாக அமர்ந்து இருந்த
பேராசிரியர் கபூர் அவர்களின்
அருகில் சென்று அவர் முன்
பணிவுடன் நின்றார்.
“என்னை தெரிகிறதா சார்...
உங்க முன்னாள் ஸ்டூடண்ட் சார்...
எப்படி சார் இருக்கீங்க....”
புரபஸர் இதை சற்றும் எதிர்பார்க்க
வில்லை.மிகவும் மனம் நெகிழ்ந்து
போனார். அந்த நாள்...
ஓரு பவர்புல் அமைச்சர்,
பிற பிரமுகர்கள் முன்னிலையில்
பேராசிரியர் அப்துல் கபூர் அவர்கள்
முன் ஓரு மாணவனைப் போல் கூனி
குறுகி நின்று வணங்கிய காட்சி
எங்களையெல்லாம் மிகவும்
பரவசப்படுத்திய நிகழ்ச்சி
என்றேசொல்ல வேண்டும்.
Gone are the good
Golden days
இன்றைய நாட்களில்...
அமைச்சர்,பேராசிரியர்,
பேராசிரியை,மாணவ
செல்வங்களின் பண்பை
நினைத்தால் மனம் பதறுகிறது.
No comments:
Post a Comment