நண்பர் ஒருவர் அதிகாலையில் ஊருக்குக் கிளம்பினார்.
அப்போது அந்த பூனை சடாரென சாடி அவருக்கு முன்பாக ஓடி வந்தது..
இருட்டாக இருந்ததால்
எங்கே போனது என்று தெரியவில்லை..
எனக்கு அது என்னவோ நண்பர் இருந்தக் காருக்குக் கீழே போனது போல ஒரு தோற்றம்..
இன்னொரு நண்பரும் அதை தான் சொன்னார்..பார்த்த பிறகு காருக்குக் கீழே போய் நின்று கொண்டது..
பின்பு அந்த வாகனம் கிளம்புவது வரை அங்கேயே சுற்றி சுற்றி வந்தது..
அந்த கார் கிளம்பியதும் எங்களோடு திரும்பி வந்தது.
நான் மற்ற நண்பர்களிடம் கேட்டேன்..
அவர்கள் சொன்னார்கள்.."பயணம் சென்ற நபர் அந்த பூனைக்கு தினமும் உணவுக் கொடுப்பவர்.பாசமாக இருப்பவர்."
அவர் பயணம் செல்வதை புரிந்த கொண்ட ஐந்தறிவு பூனை எத்தனை பாசமாக நன்றி உணர்வோடு சுற்றி சுற்றி வந்திருக்கிறது..
எத்தனை அற்புதமான நிகழ்ச்சி..
அந்த பூனையின் மொழி அறிந்திருந்தால் அதன் உணர்வுகள் சொல்லும் பாசத்தை கண்டிப்பாக கேட்டிருப்பேன்..
என்ன செய்வது..!?
எத்தனை நல்லது செய்தாலும் திரும்பினால் நம்மை பற்றி புறம்பேசும் நன்றி கெட்ட மனிதர்களை விட ஐந்தறிவு படைத்த பூனைகளை வளர்த்து உணவு கொடுத்தால் நம் மரணத்தில் நமக்கான உண்மையான கண்ணீரை பார்க்கலாம்..
..Saif Saif
No comments:
Post a Comment