Monday, April 9, 2018

சுவடுகள் ....


பூமியில் பதிவது
பாதங்களின் சுவடுகள் ...

காலங்களில் பதிவது
வாழ்க்கையின் சுவடுகள் ...

உழைப்பில் பதிவது
வேர்வையின் சுவடுகள் ...

கரங்களில் பதிவது
உழைப்பின் சுவடுகள் ...



காட்சிகளில் பதிவது
விழிகளின் சுவடுகள் ...

குரல்களில் பதிவது
மொழிகளின் சுவடுகள் ...

கண்ணீரில் பதிவது
சோகத்தின் சுவடுகள் ...

சோகத்தில் பதிவது
வலிகளின் சுவடுகள் ...

செவிகளில் பதிவது
ஒலிகளின் சுவடுகள் ...

கோபத்தில் பதிவது
ஆவேசத்தின் சுவடுகள் ...

நடிப்பில் பதிவது
வேசத்தின் சுவடுகள் ...

நாசிகளில் பதிவது
சுவாசத்தின் சுவடுகள் ...

மலர்களில் பதிவது
வாசத்தின் சுவடுகள் ...

கைபேசியில் பதிவது
விரல்களின் சுவடுகள் ...

நினைவுகளில் பதிவது
காலங்களின் சுவடுகள் ...

தொழுகையில் பதிவது
நன்மைகளின் சுவடுகள் ...

சுவர்க்கத்தில் பதிவது
நல்லமல்களின் சுவடுகள் ...

அப்துல் கபூர்

No comments: