Thursday, April 26, 2018

எழுத்து பிழை

Vavar F Habibullah




கதை,கவிதை,கட்டுரை
எழுதுவது பிழைப்புக்கு
வழி சொல்லுமா!
கவிதை எழுதுவது எமக்கு
தொழில் என்று சொன்ன
பாரதி கூட அவன்
வாழ்ந்த காலத்தில் கவிதை
ஒன்றைஎழுதி தமிழ் கவிதை
பரிசு போட்டிக்கு அனுப்பியும்
அது சுத்தமாக கண்டு கொள்ள
படவில்லை.

“செந்தமிழ் நாடென்னும்
போதினிலே இன்பத்தேன்
வந்து பாயுது காதினிலே...”
அந்த கவிதையே, பின்னாளில்
புகழ்பெற்ற பாரதியின் கவிதை
எனும்போது சற்று வியப்பாகவே
இருக்கிறது.

மேநாடு போலன்றி
நம் நாட்டில், சினிமா
கவிஞர்களால் மட்டுமே
புகழ்பெற முடிகிறது.
கதாசிரியர்களை விட
வசனகர்த்தாக்களே
அதிகம் பேசப்படு பொருளாக
உள்ளனர்.அமேசனிலும்,
கிண்டிலிலும் காசில்லாமல்
பதிவிறக்கம் செய்யும்
நூல்களாகவே சங்க
இலக்கியங்கள் உள்ளன.

மிக நீண்ட காலம்
நான் சென்னையில்
வசித்த போது, சில அற்புதமான
பத்திரிகை ஆசிரியர்கள்,
பத்திரிகை முதலாளிகள் எனக்கு
நண்பர்களாக கிடைத்தார்கள்.
எனது தமிழ் ஆர்வம் வளர துணை
நின்றதோடல்லாமல் தலை சிறந்த பத்திரிகைகளில் எல்லாம் பெரிய
தலைப்புகளில் நான் எழுதவும்
இவர்களே துணை புரிந்தார்கள்.

தினத்தந்தி,மாலைமுரசு,ராணி,
தினகரன்,வாசுகி என அது விரியும்.
மாலை முரசு நிறுவனம் அவற்றை
புத்தக வடிவில் வெளிக் கொணர
உதவுதாக சொன்னது.எனது
நீண்ட வெளிநாட்டுப் பயணம்
காரணமாக அந்த ஆசை தடை
பட்டது.

பார்ப்பது,கேட்பது,படிப்பது,
ரசிப்பது,விமர்சிப்பது எளிதானது.
எழுத்து படைப்பு.. என்பதால் சற்று
கடினம் நிறைந்த செயலாகவே
படுகிறது.பேச்சுக்கலை அழகு
என்றால் நல்ல கருத்து செறிந்த
எழுத்து நடையும் ஓரு வகையில்
அழகு தான்.

முகநூலில் இப்போது தலை
சிறந்த புதிய எழுத்தாளர்களை தினமும் சந்திப்பது மனதிற்கு மகிழ்வைத் தருகிறது.

Vavar F Habibullah

No comments: