இல்லையென்றால் தன்னைத்தானே சாடிஸ்ட்களாக தன்னைத்தானே கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை செய்து கொள்ளும் முயற்சியில் இறங்கி விடுவார்கள். இதில் எத்தனையோ முறைமைகள் இருந்தாலும் அதில் ஒன்றுதான் புகை பிடிக்கும் பழக்கம் இந்த பழக்கம் உடையவர்களிடம் கேளுங்கள் அதற்கு சொல்கின்ற பதில் டென்ஷன் மன அழுத்தம். பிறர் களை சித்திரவதை செய்வது கொஞ்சம் கொஞ்சமாக கொள்வது பாவம் என்றால் தன்னைத்தானே சாடிஸ்ட்களாக இருந்து புகை பழக்கம் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தன்னைத்தானே சித்திரவதை செய்து கொள்வது மிகப்பெரிய பாவம் தான்.
ஒருவர் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகும் பொழுது பாதிக்க படுவது அவர் மட்டும் அல்ல.இவர் விடும் புகையில் உள்ள நிக்கோட்டின் என்ற நச்சு தன்மை அருகில் உள்ளவரையும் பாதிக்கும் என்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்க பட்ட ஒன்று. ஒவ்வொரு நாளும் 20 சிகரெட்டுகள் புகைப்பவர் ஒரு வருடத்தில் தனது சுவாசப்பைக்குள் ஒரு கோப்பை தார் ஊத்துவதற்கான செயலைச் செய்து விடுகின்றார்.
உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது?
புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது.?
என்பதை ஆராய்ந்து பார்ப்போமேயானால்.... புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள். இந்த நிலையில் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். ஆதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது.
உங்கள் மனம் வேதனை பட்டால் உங்கள் உடலும் புன்னாக வேண்டுமா என்ன ? நீங்கள் இதிலிருந்து விடுதலை பெற ஒரே வழி உங்கள் ஆழ்மனதை நீங்கள் புரிந்து உணர்ந்து கொள்வதுதான். இறைவன் கூறுவதைக் கவனிங்கள்.
قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 39:53)
கீழே உள்ள இறைவசனத்தையும் அடுத்துள்ள இறை திக்ரையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் ஓதி வாருங்கள் உங்கள் மனம் சார்ந்த புகை பழக்கம் நின்றுவிடும்.
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ
மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாகத் நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 13:28)
நீங்கள் ஒவ்வொருமுறையும் புகை பிடிக்கும் போது அல்லது நினைவு வரும்போது இந்த இறைவசனத்தையும் இறை திக்ரை. ""يا مانع"" யா மாநிவு ஓதிக் கொள்ளுங்கள்.
மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
(தல்ஸமாத்)
மேலப்பாளையம்
திருநெல்வேலி
No comments:
Post a Comment