திருநெல்வேலி பேட்டை எம்.முகம்மது இஸ்மாயில் சுதந்திர இந்தியாவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராகவும், காயிதே மில்லத் என்ற தகுதி பெற்றும் இருந்த தலைவர் ஹிலால் முஸ்தபா அவர்களுக்கு தாதா முறை வேண்டும்.
முகம்மது அலி ஜின்னா அவர்களுக்கு முன்னர் அலி சகோதரர்கள் என வரலாறு சிறப்பித்துக் குறிப்பிடும் மௌலானா சௌகத்தலி, மௌலானா முகம்மதலி, இவர்களும் இவர்களின் தாயார் பீயம்மா அவர்களும் சுதந்திரப் போராட்டப் பிரச்சாரத்திற்குச் சென்னை வந்த காலத்தில் பெரம்பூரில் உள்ள ஹிலால் முஸ்தபா அவர்கள் பாட்டனார் ஆடுதுறை ஜமால் முகம்மது சாஹிபின் பங்களாவில் தங்கி இருந்தார்கள்.
திருநெல்வேலி முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு வந்த போது பீயம்மா அவர்களுக்கும் மௌலானா முகம்மதலி அவர்களுக்கும் தென்காசி ஹிலால் முஸ்தபா அவர்கள் பாட்டனார் இல்லத்தில் விருந்தளித்த பாக்கியம் கிடைத்தது.
இது மட்டும் அல்ல, மஹாத்மா காந்தி நிதி திரட்டி சென்னை ராஜ தானிக்கு வந்த போது ராஜகோபாலச்சாரியார் (ராஜாஜி) சென்னை தம்புச்செட்டித் தெருவில் இருந்த ஜமால் முகம்மத் அண்ட் கோ என்னும் தோல் பதனிடு ஏற்றுமதி அலுவலகத்திற்கு மகாத்மா காந்தியை அழைத்து வந்தார். ஜமால் முகம்மது சாஹிபிடம் காந்திஜி நிதி கேட்ட பொழுது, காந்திஜியிடம், ஜமால் முகம்மது சாஹிப் , “மஹாத்மா ஜி உங்கள் நிதி வசூல் தொகையினுடைய இலக்கு எவ்வளவு?” என்று கேட்டார்கள்.
அதற்குக் காந்திஜி ஒரு கோடி என்று பதில் தந்தார்.
ஜமால் முகம்மது சாஹிப் உடனே தன் செக் புக்கை எடுத்து செக்கில் தொகை குறிப்பிடாமல் கைய்யெழுத்துப் போட்டு மகாத்மாஜி நீங்கள் உங்கள் தேவைக்குரிய முழுத்தொகையையும் இதில் குறித்துக் கொள்ளுங்கள் என்றார்.
ராஜாஜியும் காந்திஜியும் பிரமித்து போனார்கள். ஜமால் முஹம்மது சாஹிப் கொடுத்த செக்கில் ஒரு லட்சம் குறித்துக் கொண்டார்.
“மிஸ்டர் ஜமால் முஹம்மது, இந்தியாவினுடைய அனைவர் பங்களிப்பும் இந்த நிதியில் இருக்க வேண்டும். ஏனவே உங்கள் பங்குக்கு இந்தத் தொகை எனக்குத் திருப்தியாக இருக்கிறது” என்று காந்திஜி ஜமால் முஹம்மது சாஹிபிடம் கூறிச் செக்கைப் பெற்றுக் கொண்டார்.
அந்த ஜமால் முஹம்மது சாஹிபின் மகள் வயிற்று பேரனாக இறைவன் ஹிலால் முஸ்தபா அவர்களைப் படைத்திருக்கிறான். அல்ஹம்து லில்லாஹ்.
ஹிலால் முஸ்தபா அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் ஹிலால் முஸ்தபா அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்
ஹிலால் முஸ்தபா அவர்கள் ஒரு சிறந்த ,அருமையான எழுத்தாளர் ,நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .
அவரது கவிதைகள் ,கட்டுரைகள் அனைத்தும் பாராட்டுகள் பெற்றவை .அவைகள் பலவற்றை நமது வலைப் பூவிலும், வலைதளத்திலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளோம்
Hilal Musthafa
தருணங்களின் தலைவர். . . ! / Hilal Musthafa
அவரது ஆக்கங்களை முகநூலில் அவரது பக்கத்தில் Hilal Musthafa பார்க்கலாம் .
Writter
Studied at Annamalai University, Chidambaram
Lives in Chennai, India
From Tirunelveli
ஹிலால் முஸ்தபா அவர்களை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்
Jazaakum'Allah Khairan.
நன்றி
"May Allâh reward him [with] goodness.".
அன்புடன்
முகம்மது அலி ஜின்னா
No comments:
Post a Comment