Saturday, April 7, 2018
இரவில் தூங்காமல் அல்லது தூக்கம் வராமல் இருந்தால்
நீங்கள் இரவில் தூங்காமல் அல்லது தூக்கம் வராமல் இருந்தால், உணவுகள் மாற்றத்தால், குறைப்பாட்டால், தலையில் அடிப்பட்டதினால், சின்ன சின்ன பிரச்சனைகளை கூட மனதில் வைத்து நினைத்து நினைத்து வருந்துவதுவதால், அதனால் வரும் குழப்பத்தால், எந்நேரமும் கவலையில் இருப்பது, தனிமையில் அதுவும் வயதான காலத்தில் இருப்பது இப்படி இதனால் வரக்கூடிய விளைவுகள், நோய்கள் அதிகம் இருந்தாலும் ஒவ்வொருவரையும் முதலில் பாதிக்கக்கூடிய விஷயம் " மறதி"
இந்த மறதி நோய் ஒவ்வொருவரையும் இந்த உலகில் வாழ்வதையே தகுதியற்றதாக ஆக்கிவிடும். இந்த மறதி நோயிலிருந்து விடுதலை, குணம் பெற வேண்டுமென்றால் உங்களை நீங்கள் எங்கே துலைதத்தீர்களே அங்கே நீங்கள் தேடவேண்டும். அதாவது மறதிக்கு காரணமான செயலை விட வேண்டும். பிறகு உங்களை நீங்கள் நம்பவேண்டும், மதிக்கவும் வேண்டும் பின்னர் மருத்துவத்தை விட இறை திக்ரு தியானம் உங்களை மாற்றும்.
தினமும் காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு ஃபரழான தொழுகைக்கு பிறகும் " يا مقتدر " யா முக்ததிரு ". என்று ஓதி வாருங்கள் இப்படி ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு ஃபரழான தொழுகைக்கு பிறகும் ஓதி வருவதைக் கண்டு இறை சக்தி உங்களுடன் இணைந்து நீங்கள் இழந்த அனைத்தையும் கொடுத்து உங்களுக்கு ஞாபகம் மறதி நோய் நீங்கி உங்களை மிக தெளிந்த புதிய மனிதராக மாற்றக்கூடிய சக்தி இந்த இறை இஸ்மிற்கு உண்டு. உங்கள் உள்ளம் அமைதி கொண்டால் உங்கள் உடல் மற்றும் நோய்கள் அனைத்தும் அமைதிக் கொள்ளும்.
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ
மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாகத் நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 13:28)
மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
(தல்ஸமாத்)
மேலப்பாளையம்
திருநெல்வேலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment