Wednesday, April 11, 2018

பாலைவனச் சோலைவனம்

Vavar F Habibullah

நீர் வரட்சி, நில வரட்சி,
நீர் அருவிகளில் வரட்சி
நீர் தேக்கங்களில் வரட்சி

தலக்காவேரி இருந்தும்
நீர் வளம் இருந்தும்
அண்டையர்
நீர் தர மறுப்பதால்
நமதூரில் பாய்ந்தோடும் காவேரி
நீரின்றி இன்று வரண்டு கிடக்கிறது.
இயற்கை பொய்த்தால்
மனித செயற்கை கை கொடுக்குமா!

சமீபத்தில்
நான் துபை சென்றிருந்த நேரம்
எனது மகன் ஆசிக், உங்களுக்கு
துபையில் அதிசயம் ஒன்றை காட்டி
தரவா என்று கேட்ட போது, ஏதோ
விண்ணைத் தொடும் புது வண்ணமிகு
கட்டட அழகு என்றே எண்ணினேன்.



ஒரு நீண்ட பயணத்திற்கு பின்
அவர் என்னை அழைத்து வந்த
இடம், செய் அல் - சலாம் என்ற
பாலைவனம். பாலையை சுற்றிலும்
மனித முயற்சியில் உருவான
ஒரு மருத நிலம். அதை சுற்றிலும்
கரை புரண்டோடும் அல் குத்ரா
எனும் அழகிய செயற்கை நதி.
உள்ளபடியே பூமியில் ஒரு அதிசயம்.

கடல்நீரை பாலை வெளிக்குள்
இழுத்து வந்து அதை வற்றாத ஜீவநதியாக நிலபரப்பில் ஓட விட்டு,வண்ணப்
பறவைகள் வந்து இளைப்பாறிப் போகும் பறவைகள் சரணாலயமாக்கி, ஒப்பற்ற உலக
அதிசயமாக மாற்றிய பெருமை
துபை ஆட்சியாளர்களைச் சாரும்.
நூற்றுக்கும் மேற்பட்ட உலக
பறவை இனங்கள் இங்கு வந்து
தங்கி இளைப்பாறி செல்கின்றன
என்பதே அதிசயிக்க வைக்கும்
உண்மை.

பாலை எங்கிலும் நிழல் தரும்
அதிசய மரங்கள், சுற்றிலும் பசுமை
போர்த்த புல்வெளிகள், பாலையை
படம்பிடிக்கும் பகட்டு மரங்கள்.
அதில் அமர்ந்து நதி அழகை
ரசிப்பது கூட தனி அழகு தான்.

மனது வைத்தால்...
நாம் கூட புதிய தொழில்
நுட்பத்தை பயன்படுத்தி
வற்றாத புதிய காவேரி நதி
ஒன்றை நம் தமிழ்நாட்டில்
நிர்மாணிக்க முடியும் என்றே
எனக்கு தோன்றுகிறது.



 வீடியோ பார்க்க

Vavar F Habibullah 

No comments: