Tuesday, August 2, 2016

பதவியும் பகட்டும்

Vavar F Habibullah
 பதவி - சாதாரண போலீஸ்காரரைக் கூட மனிதர்களை மிகவும் இளக்காரமாக பார்க்கத் தூண்டுகிறது.அதிகாரம் தரும் போதை இது.
அரசு அலுவலர்களும், அரசியல்வாதிகளுமே நம் நாட்டில் அதிகாரம் மிக்கவராக திகழ்கிறார்கள்.பணம் படைத்தவர்களையும், புகழ்பெற்றவர்களையும் - அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளுமே ஆட்டி படைக்கிறார்கள்.

இதனாலேயே படித்தவர்கள் அதிகாரியாக விரும்புகிறார்கள்.படிக்காதவர்கள் அரசியல் வாதிகள் ஆக துடிக்கறார்கள்.ஆட்சியாளர்களே இந்நாட்களில் மாண்புகளாக, மாட்சிமை பொருந்திய மேன் மக்களாக மக்கள் முன் பவனி வருகிறார்கள்.
போலீசும், ராணுவமும் கைவசம் இருந்தால் எவரையும் அழித்தொழிக்க இயலும்.இதனாலேயே பதவி போட்டிகள் தலைவர்கள் தலைகளை பந்தாடுகின்றன.
பதவி இல்லை என்றால் மன்னன் கூட கால்தூசு பெறமாட்டான்.
சரித்திரம் எழுதிய வரலாறு இதுதான்.
POWER IN THE END, ALWAYS MAKES MEN
BECOME POWERLESS. This is natural law.

பாபிலோனிய, கிரேக்க, ரோமானிய நாயகர் களெல்லாம் பதவி இழந்த பின் நாய்களை விட கேவலமாக மக்களால் தூக்கி பந்தாடப்பட்ட கதைகள் பக்கம் பக்கமாக நீழ்கிறது.

சாதாரண மலேரியா காய்ச்சலில் படுத்து விட்ட அலெக்சாண்டரை 'மாவீரன்' என்று சொல்ல அவன் தளபதிகளே வெட்கப்பட்டனர்.
தனிமைச் சிறையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நெப்போலியன் படும் வேதனைக் குரலை கேட்டு காவலர்களுக்கு இவன் வீரன் நெப்போலியனா இல்லை - வேறு மனிதனா என்ற ஐயம் எழுந்து விட்டது.

பதவிக் கனத்தில் திமிர் பிடித்தலைந்த சீசரை அவன் நண்பர்களே சுற்றி வளைத்து கொன்று தீர்த்தனர்.சீசரை தொடர்ந்து பதவிக்கு வந்த மார்க் ஆண்டனி பயந்து தற்கொலை செய்து கொண்டான்.அவன் காதலி கிளியோபாட்ரா, காதலன் வழியிலேயே தன்னையும் மாய்த்து கொண்டாள்.

ஹிட்லரும் இதைத்தான் செய்தான்.முசோலினியை மக்கள் அடித்தே கொன்று விட்டனர்.ரஷியாவின் இரும்பு மனிதன் ஜோசப் ஸ்டாலின் படுக்கையில்...
(when Lying unconscious) அவன் நண்பர்களே அவன் முகத்தில் காரி உமிழ்ந்து தலைவன் மேல் இருந்த தணியாத கோபத்தை தீர்த்து கொண்டனர்.

பதவி இழந்தவனை காணும்போதெல்லாம் அவன் மீது பரிதாபம் ஏற்படுகிறது.பதவி திமரில் அலைபவனை கண்டால் இப்போது சிரிப்பு தான் வருகிறது.பதவி இல்லை என்றால் இவன் நிலை என்னவாகும்.பதவி ஒன்றை வைத்தே தங்களை பெரியவர்களாக எண்ணுபவர் நிலை நம் நாட்டில் மிகவும் அதிகரித்து விட்டது.

பதவியில் இருந்தவனையும் அதில் இல்லாத வனையும் சந்திக்கும் போது அதில் புதைந்து கிடக்கும் உண்மைகள் கண்களுக்கு மிகவும் தெளிவாகவே புரிகிறது.
Being an ordinary is the most extraordinary thing in this world.
 Vavar F Habibullah

No comments: