Wednesday, August 17, 2016

THE MAGIC MOMENT

Kathir Vel                 

 
இந்த போட்டோ எடுத்த கேமரான் ஸ்பென்சர் ஆஸ்திரேலியா காரர். கெட்டி இமேஜஸ்ல ஒர்க் பண்றார். உசேன் போல்ட் உண்மையில் மனிதன்தானா அல்லது வேற்று கிரக வாசியா என்ற கேள்விக்கு வித்திட்ட அதிசய காட்சியை கேமராவில் பிடித்தடக்கிய அனுபவம் பற்றி ஸ்பென்சர் சொல்கிறார்:

ரொம்ப வருசமா போல்ட்ட ஷூட் பண்ணிட்டு இருக்கேன். 3 ஒலிம்பிக்ஸ், 2 வேல்ட் சேம்பியன்ஷிப்ஸ்ல போல்ட எடுத்திருக்கேன். உலகத்துலயே வேகமா ஓட்ற மனுசன போட்டோல புடிக்கிறது கஷ்டமான வேலைதான். ஆனா அதுல ஒரு கிக் இருக்கு.இந்த ரேஸ்ல போல்ட்ட ஷூட் பண்ண கெட்டி (இமேஜஸ்) 11 போட்டோகிராபர போட்ருந்தாங்க. அவ்ளோ பேருக்கு மத்தில நம்ம படம் வித்யாசமா வரணும்னா பெரிய சேலஞ்ச் இல்ல? அதான் கொஞ்சம் ரிஸ்க் எடுத்தாலும் பரவால்லனு டிசைட் பண்ணேன்.

கன் வெடிச்சு ரன்னர்ஸ் ஓட ஆரமிச்சதும் நானும் அவங்களோட ஓடினேன். மூணு ரிமோட் கேமரா, என் கைல வச்சிருந்த கெனான் 1 டிஎக்ஸ் எம்கே2 ்னு மொத்தம் நாலு கேமரால ஷூட் பண்ணிகிட்டு ஓடினேன்.

கெனான்ல 70-200 எமெம் லென்ஸ 135 எமெம்க்கு செட் பண்ணிருந்தேன். போல்ட்ட கேப்சர் பண்றதுக்கு ஷட்டர் ஸ்பீட 1/40க்கு ட்ராப் பண்ண வேண்டி இருந்துது. அந்த செகண்ட்ல என் ஓட்டம் நின்னாச்சு. ஆனா போல்ட்டுக்கு நேரா என் உடம்புல மேல் பகுதிய மட்டும் திருப்பி லென்ஸ அட்ஜஸ்ட் பண்ணேன்.

அப்ப போல்ட் மத்த ரன்னர்கள தாண்டிட்டார். அந்த நொடிலதான் அவர் ஒரு சின்ன புன்னகையோட கழுத்த திருப்பி பின்னாடி வந்துகிட்டு இருந்தவங்கள பாத்தார்.

ஓ மை காட். ஒரு மனிதனால முடிகிற காரியமா அது? அந்த கான்ஃபிடன்ஸ், அய்ய்யோ..

கொஞ்சம் மோஷனோடதான் அந்த ஷாட் என் கேமரால சிக்குச்சு. ஆனா அது எப்பேர்ப்பட்ட ஷாட்னு அப்பவே புரிஞ்சுருச்சு. வெரி ஸ்பெஷல்.

என்னோட படங்கள் இதுக்கு முன்னாடியும் வைரலா போயிருக்கு. ஆனா இது பக்கா டைமிங், போட்டோகிராஃபிக் ரிஸ்க் டேக்கிங், கொஞ்சம் லக் எல்லாம் சேர்ந்த கலவைல கிடைச்ச ரிசல்ட்.

உலகமே நம்ம ஃபோட்டோவ கொண்டாடுதுன்னா சந்தோஷத்துக்கு கேக்கணுமா, என்ன? போல்ட் மாதிரியே பெருமையா இருக்கு. புலிட்சருக்கு அனுப்பலாம்னு இருக்கேன்.
Kathir Vel

No comments: