தினமொருசொல்
ஒருவரின் மொழியாளுமைக்கு, அது தாய்மொழியாகினும் அல்லது அந்நிய மொழியாகினும் அவர் கற்கும் மொழியின் இலக்கணத்தைவிட அம்மொழியின் சொற்களை அறிந்துகொள்வது இன்றியமையாதாகிறது.“அதிகமான சொற்களை அறிந்து வைத்திருப்பவர்களால், இடத்திற்குத் தகுந்தாற்போல் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்தி சரளமாக அடுத்தவரிடத்தில் உரையாடல் மூலமாகவோ / எழுத்தின் மூலமாகவோ எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.” என்கிறது ஒரு ஆராய்ச்சி.
படிக்கும் மாணவர்களோ அல்லது பணியிலிருப்பவர்களோ மேற்சொன்ன ஆராய்ச்சியின் முடிவைப் பின்பற்றி குறைந்தபட்சம் தினம் ஒரு சொல் என்ற அடிப்படையில் கற்கத் துவங்கிவிட்டோமெனில், தடையின்றி பேசுவதற்கு நம்மிடையே மிகப்பெரிய சொற்களஞ்சியம் அமைந்துவிடும்.
அதனடிப்படையில் நான் கற்கும் சொற்களை, ‘நாம் கற்கும் சொற்கள்’ என்று மாற்றத் தொடங்கியதில் தோன்றியதே “தினமொருசொல்”.
இங்கு பகிரப்படும் சொல், என்னால் முடிந்த அளவு அதன் பொருள், அதை உச்சரிக்கும் முறை, அதனைப் பயன்படுத்தும் சொற்றொடர் ஆகியவற்றுடன் தருகிறேன். இருப்பினும் அதில் ஏதும் பிழைகள், திருத்தங்கள், மாற்றங்கள் மாற்றுக்கருத்துகள் இருந்தால் தயவுகூர்ந்து பின்னூட்டத்தின் வழியே தெரிவிக்கவும்.
நாம் இங்கு அனைவரும் மாணவர்களே! இணைந்து கற்போம்!!
நன்றியுடன் அன்புள்ள.
ரஃபீக் சுலைமான்.
தினமொருசொல் கற்க இதனை சொடுக்குங்கள் /கிளிக் செய்யுங்கள்
No comments:
Post a Comment