ஜெய் ஹிந்த்
வாழ்க இந்திய தேசம்...ஒவ்வொரு இந்தியனையும் தலை நிமிர வைக்கும் இந்த வீரம் செறிந்த சொல்லை கேட்டு வெகுண்டதுஅன்று, இந்தியனை கட்டியாண்ட பிரட்டிஷ் அரசு.
"ஜெய் ஹிந்த்"
என்ற இந்திய தேசத்தின் வெற்றிக்குரலை உலகுக்கு அறிமுகம் செய்தவர், மேஜர் ஆபித் ஹசன்.ஹைதராபாத்தை சார்ந்த இவர்,நேதாஜி சுபாஸ் சந்திர போசின் நெருங்கிய நண்பர்.
ஹசன் - ஒரு சிறந்த பொறியியல் வல்லுநர்.
மேற்படிப்பிற்காக ஜெர்மனி வந்த இவரை நேதாஜியின் சுதந்திர தாகம் ஈர்த்தது.படிப்பை உதறிவிட்டு நேதாஜியை பின் தொடர்ந்த ஹசன் பின்னாளில் நேதாஜியின் அந்தரங்க செயலராக தன் பணியை தொடர்ந்தார்.
ஜெர்மன் மொழியில் நிபுணரான ஹசன் உதவியுடன், ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரை சந்தித்த நேதாஜி இந்தியாவிலிருந்து ஆங்கிலேயரை விரட்டியடிக்க ஹிட்லரின் உதவியை நாடினார்.
இரண்டாம் உலகப் போரின் முடிவுகள் நேதாஜியின் கொள்கைகளுக்கு எதிராக அமைந்ததால் நேதாஜியின் சுதந்திர இந்திய கனவுகள் தகர்ந்து போயிற்று. என்றாலும் நண்பன் ஹசன் கற்றுத் தந்த 'ஜெய் ஹிந்த்' என்ற வெற்றிச் சொல் மட்டும் நேதாஜியின் நெஞ்சை விட்டு அகலவில்லை.
பின்னாளில் இந்திய தேசிய காங்கிரசின் உயிர் மூச்சாகவும் ஜெய் ஹிந்த் என்ற சொல் மிளிர்ந்தது. 'ஜெய் ஹிந்த்' என்ற சொல்லை இன்றும் உச்சரிக்காத தேசியத் தலைவர்களே நமது நாட்டில் இல்லை.
இந்த சொல்லை இந்தியனுக்கு கற்றுத் தந்த ஆபித் ஹசனை இளம் தலைமுறையினருக்கு அறிமுக்ம் செய்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின், இந்திய வெளி விவகாரத் துறையில் பெரிய பதவிகளை வகித்த இவர், இந்திய அரசின் தூதுவராக பணியாற்றாத நாடுகளே இல்லை எனலாம்.
nowadays........
ஜெய் ஹிந்த் என்ற சொல்லை - சொல்ல... சொல்ல... சுவாசக்காற்றும் புதுப்புது அர்தங்களை சுமந்து தாலாட்டு பாடி மகிழ்விக்கறது.
JAI HIND
Vavar F Habibullah
No comments:
Post a Comment