Vavar F Habibullah
ஒரு முறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபரகாம் லிங்கனை சிறுமை படுத்தும் நோக்கில் அவையில் இருந்த ஒரு மேல் மட்ட பிரபு இருக்கையில் அமர்ந்த படியே ஒரு முரட்டு கேள்வியை மிகவும் ஏளனத்துடன் லிங்கனை நோக்கி கேட்டார்.தன் காலில் கிடந்த ஷூவை கழற்றி எடுத்து கைகளில் ஏந்தியபடி அவர் கேட்ட கேள்வி சற்று காட்டமானது தான்.
"மிஸ்டர் லிங்கன்!
நீங்கள் அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கலாம்.....ஆனால் நான் அணிந்திருக்கும் ஷூவை விட தரம் குறைந்த ஷூக்களை கைகளால் தைக்கும் ஒரு ஷூ மேக்கரின் மகன் தான் நீங்கள் என்பதை இந்த அவைக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்."
அமைதியாக அந்த விமர்சனத்தை புன் சிரிப்புடன் ஆமோதித்த லிங்கன் எழுந்து நின்று தன் கருத்தை முன் வைத்தார்.
"அன்புக்குரிய லார்ட் அவர்களே....!
நான் ஒரு சாதாரண ஷூ மேக்கரின் மகன் என்பது என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தெரியும்.
இதை மீண்டும் எனக்கு நினைவூட்டிய உங்களுக்கு நன்றி.என் தந்தை மிகவும் திறமையான, நேர்த்தியான சிறந்ததொரு ஷூ மேக்கராக திகழ்ந்தவர். அவர் அளவுக்கு ஷூ செய்வதில் நான் நிபுணன் இல்லை. என்றாலும் உங்கள் ஷூவில் ஏதும் பழுது இருந்தால் அதை நான் சரி செய்து தருகிறேன்.
என் தந்தை அளவுக்கு அத்துணை நேர்த்தியாக என்னால் செய்ய முடியும் என்பதற்கு மட்டும் என்னால் எந்த உத்தரவாதமும் தர இயலாது."
அவையில் எழுந்த கரகோஷம் அடங்க மிக நீண்ட நேரம் ஆனது.
அவமானத்தால் மிகவும் குறுகிப் போனார் ஏளனம் செய்த பிரபல லார்ட்.
லிங்கன் போன்றவர்களை அவமானபடுத்துவது என்பது எவருக்கும் இயலாத ஒன்று.
It is too difficult to humiliate a person like Lincoln
No comments:
Post a Comment