எதிபாராத ஏமாற்றம், எதிபார்த்த ஏமாற்றம் அல்லது நடக்குமென எதிபார்த்து செயல்பட்டு நடக்காமல் போகும்போது மனம் நருக்கடிக்கு உள்ளாகிறது.
இது தற்கால எதிர்பார்ப்புகள் நிறைந்த சமூகத்தில் அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வு.மனிதனின் தேவைகள் விரிவடைய நெருக்கடியும் கூடுகிரது.
நெருக்கடிகளை நிமிர்ந்து நின்று நேர்கொள்ளும் பொழுது அதன் தாக்கம் குறைந்து விடுகிறது.
வெற்றிக்கான வழிகள் திறந்து கொடுக்கின்றன.
அவரவரது தற்போதைய நிலைமைக்கு அவரவரது எண்ணத்தை தொடரும் செயல்களே காரணமாகும்.
தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
பந்தயம் என்றால் ஒருவன் தான் வெற்றிபெற முடியும் மாற்றுள்ளோர் அவதியுற வேண்டும். அப்படித்தான் வரையறுத்துள்ளார்கள்.
போட்டியாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள் என்று சொல்லும், சொல்லித்தரும் சம்பவத்தை பாப்போம்.
ஆப்ரிக்காவில் ஒரு சிறு கிராமத்திற்கு வந்த வெளிநாட்டுகாரர் சிறுவர்களுக்கு போட்டிவைத்து பரிசு வழங்குவதற்காக அவர்களை அழைத்துவந்து ஒரு கூடை நிறைய பழங்களை சிறிது தொலைவிலுள்ள மரத்தின் அடியில் வைத்துவிட்டு சிறார்களிடம் சொன்னார் எல்லோரும் ஓடுங்கள் யார் முதலில் வந்து பழக்கூடையை தொடுகிறாரோ அவருக்கே கூடை நிறைய பழங்களும் பரிசாக கிடைக்கும் என்றார். பாவம் அவரைச்சொல்லி குற்றமில்லை. அவர் அப்படிதான் அதிகப்படியான தோல்வியாளர்களை உருவாகும் நாகரீக உலகிலிருந்து வந்தவர்.
அந்த நாகரிக்கமில்லாத இருண்ட கண்டத்து சிறுவர்கள் ஒருவரோடு ஒருவர் கைகளை பிடித்துக்கொண்டு சேர்ந்தே ஓடிச்சென்று எல்லோரும் பழக்கூடையை ஒன்றாகவே தொட்டனர் எல்லோரும் வெற்றி பெற்றனர். வெற்றிக்கனியை பகிர்ந்து உண்டனர்.
அவர்களின் சந்தோச ஒற்றுமையில் ஆடிப்போனான் வெளிநாட்டுக்காரன்.
நெருக்கடியற்ற உருப்படியான சமூகத்தை உருவாக்க முடியாதா ?
No comments:
Post a Comment