Tuesday, August 2, 2016

பெண் :கண்கள் படபட துடிக்குது துடிக்குது

பல்லவி :
பெண் :கண்கள் படபட துடிக்குது துடிக்குது
நெஞ்சம் ஒருபுறம் கனக்குது கனக்குது
தேகம் ரெக்கையின்றி வானில் பறக்குது
பறக்குது... பறக்குது... பறக்குது

ஆண் :கால்கள் தரையில் படவும் மறுக்குது
கைகள் உன்னை தழுவிட துடிக்குது
எல்லாம் நீயென உள்மனம் சொல்லுது
சொல்லுது... சொல்லுது... சொல்லுது...


சரணம் : 1
ஆண் : எதையும் தாங்கும் இதயம் இன்று
உன்னை கண்டதும் மெழுகாச்சு
பெண் : உன்னையும் என்னையும் சேர்த்தே இன்று
ஊரே பேசும் பேச்சாச்சு
ஆண் : கத்தியும் ரெத்தமும் இல்லாமல் இங்கு
முத்தத்தின் சண்டை வந்தாச்சு
பெண் :வெற்றிக் கொண்ட இடமெல்லாம்
காதல் வெற்றிக்கொடியை நட்டாச்சு

பல்லவி :

சரணம் : 2
ஆண் : முள்ளே இல்லாத காம்பில் இன்று
புதியதாய் பூவொன்று பூத்தாச்சு
பெண் : புதியதாய் பூத்த பூவும் உன்மேல்
வாசத்தை முழுதும் விதைச்சாச்சு
ஆண் : தேடிய விளைநிலம் நீதானென்று
பார்த்த கண்களில் முடிவாச்சு
பெண் : பதினெட்டு வருஷம் காத்த நிலத்தை
உன்பேரில் இன்று தந்தாச்சு

பல்லவி :

(என் பாடல் தொகுப்பில் இருந்து)

என்றும் கவியுடன்
முஹம்மது முஸம்மில்.
 என்றும் கவியுடன் முஹம்மது முஸம்மில்

No comments: