Abu Haashima
என்ன வியாபாரம் செய்தாலும் அதை வாங்குவதற்கென்று பல வாடிக்கையாளர்கள் கடையைத் தேடி வருவார்கள்.
அவர்கள் யாராக இருந்தாலும் உரிய மரியாதை கொடுத்து இணக்கமாகப் பேசி பொருட்களை விற்பது வியாபாரியின் சாமர்த்தியம்.
அடிக்கடி பழங்கள் வாங்கும் ஒரு கடையில் இன்று குட்டி ஆப்பிள்களை பார்த்தேன்.
அதில் எனக்கு கொஞ்சம் விருப்பமுண்டு.
தம்பி என்ன விலை என்றேன்.
விலையைச் சொன்னான்.
சரி நல்ல பழமாகப் பார்த்துப் போடு என்றேன்.
பழத்தை எடைபோட்டுக்கொண்டே ...
" நல்ல பழமா ?
பல்லு இருக்கா ?
கடிச்சுப் பாரும்.
அப்போ தெரியும் " னு சொன்னான்.
அவன் பேச்சு எனக்கு ரசிக்கவில்லை.
" தம்பி எனக்கு பல்லு இல்லே.
பல்லு மொளச்சப்புறம் உங்கிட்டே பழம் வாங்கிக்கிறேன்." ன்னு சொன்னேன்.
அவனுக்கு அது சரியா புரியல.
அண்ணே போதுமான்னு கேட்டான்.
" வேண்டாம்பா ...
நீ பல்லு உள்ள ஆளா பார்த்து யாவாரம் பண்ணு.
எனக்கு வேண்டாம்"னு வெளக்கமா சொன்னேன்.
அப்பத்தான் அவனுக்கு கொஞ்சம் புரிஞ்சுது.
" அண்ணே ... தெரியாம சொல்லிட்டேன் .
வாங்குங்க அண்ணே " ன்னு சொன்னான்.
" இனி உன்கிட்ட எனக்கு வியாபாரமில்லே.
ஒரு கஸ்டமர்கிட்ட எப்படி பேசணும்கிற வெவரமே உனக்கு இல்லே. அப்புறம் எப்படி என்கிட்டே வியாபாரம் பண்றது ?" ன்னு கொஞ்சம் வெவரமாவே சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
இதுதான் நம்ம ஆளுங்ககிட்ட உள்ள மோசமான குணம். நாலுதடவை அவன்கிட்ட பொருள் வாங்கினா அவனே நமக்கு என்ன வேணும்கிறதை தீர்மானிக்கக் கூடிய அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்கிறான்.
அப்புறம் நமக்கு எதுவுமே தெரியாதுங்கிற ஒரு இமேஜை அவனே நம்மீது கற்பனை பண்ணிகிட்டு அதற்குத் தகுந்தாற்போல் பேச ஆரம்பிக்கிறான் . இவனிடம் எதற்கு வம்பு என்று வேறு கடையில் நாம் பொருட்கள் வாங்கினால்
" ...... ... நம்ம கடையில வாங்க மாட்டானுவோ...." அப்படின்னு மானங்கெட்ட கிழி கிழிப்பாங்க.
கொஞ்ச நாள்ல கடையை பூட்டிருவாங்க.
அதே நேரம் இப்படி அடிக்கடி நாம வியாபாரம் பண்ற ஒரு நாடார் கடையிலே போயி
" அண்ணாச்சி நல்ல பழமா?" ன்னு கேட்டா...
" அண்ணாச்சி ... சாப்பிட்டு பாருங்க.
நல்லா இருந்தா வாங்குங்க " என்று சொல்வார்.
பல்லு இருக்கான்னுல்லாம் கேள்வி கேட்க மாட்டார்.
நம்ம ஆளுங்கதான் அதிக பிரசங்கிர்தனமா பேசி சொந்த காசில சூனியம் வச்சுகிட்டு நாசமாப் போயிடுறாங்க.
என்னத்தை சொல்ல ?
( அல்லாஹ் உதவியால் இதுவரை எனது எந்த பல்லுக்கும் பழுது ஏற்படவில்லை என்பது
முக்கியமான விஷயம்.)
Abu Haashima
No comments:
Post a Comment