Saturday, June 19, 2021

இறைசிந்தனை ஜும்ஆ என்பது ஒன்று கூடுதல் என்பதே!

 


Noor Saffiya


💞 இறைசிந்தனை

                                 🌹جمعة مباركة🌹

ஜும்ஆ என்பது ஒன்று

கூடுதல் என்பதே!

ஜும்ஆ தொழுகை என்பது

ஜனங்கள் ஒன்று கூடி

தொழும் நிகழ்வே!

ஆதம்,ஹவ்வா(அலை)

அரஃபாவிலிணைந்த நாள்!

அதனாலேயும்,

ஜும்ஆ நாள் என்பதுமுண்டு!

ரஹ்மத்தின் வாயில்கள்

திறக்கும் நாள்!

ரப்பின் அருட்கடாச்யம்

இறங்கும் நாள்!

யவ்முல் மஜீது

(அதிக நற்கூலி பெறும் நாள்)

என வானவர்கள்  கூறும் நாள்!

உம்மத்தே

முஹம்மதியாக்கென

உகப்பாய் தந்த கிஃப்ட் நாள்!

உயரிய வணக்க நாள்!

உன்னத வாழ்வு அளிக்கும்

நாள்!

சூரியன் உதிக்கும்

நாளிலே!

ஜும்ஆ தினமே

சிறந்த நாள்!

முதல் மனிதராய்

ஆதம் (அலை)

படைத்த நாள்!

முன்னோன் ஆதமிற்கு

சுவர்க்கமளித்த நாள்!

மேலோன் அதிலிருந்து வெளியேற்றிய நாள்!

உலகின் 🌏 முடிவு நாள்!

ஊதிடும்சூர்”_ன் நாள்!

மூச்சு நிற்கும் நாள்!

முழுவதும் சமர்ப்பண நாள்

வாரத்தின் பெயராய்

சூரா 62 அத்தியாயம்

தேர்ந்தெடுத்த நாள்!

வாரத்தின் சிறப்பு

வழிபாட்டு நாள்!

வள்ளலே பெருநாள்போல்

வணங்கிய நாள்!

அஸ்அத்பின் ஸுராரா(ரலி)

அவர்களுக்கு நபி சொல்லி

ஆரம்பித்த நாள்!

அந்நாளின்  அமலிலே

அவன் நியமித்த நேரம்

அவனில் கேட்கும் துஆ அவனே!மறுக்காது, அல்லாஹ் கபூலாகும் நாள்!

                        يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ

                        لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ

                        فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ

                        وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ

                        خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ🌹

வியாபாரம் எதுவானாலும்

விரைந்து அமல் செய்தால்,

வெகுமதியின் உச்ச நாள்!

மிளிரும் குளிப்பு நாள்!

மணம் பூசும் மகிமை நாள்!

மகிழ்ந்த ஆடையின் நாள்!

மன ,மேனி,பல், சுத்த நாள்!

சுத்தத்தின் சுகந்த நாள்!

சுறுசுறுப்பான நாள்!

சோகம் நீக்க தந்த நாள்!

சுகம் நிலைக்க வந்த நாள்!

ஒருவர் நடக்கும் எட்டும்!

ஒரு வருட நொன்பின்

நன்மைக்கே!

ஒரு வருட நின்று வணங்கிய

நன்மைக்கே!

ஒருவனே அளிப்பதற்கே!

ஒவ்வொன்றும்

நேராக்குவதற்கே!

பள்ளி வாயில் மலக்குகள்!

ப்ரியமாய் வரும் நபர்கள்!

பாங்குடனே எழுதுவர்!

படைத்தவன்

அருளுக்கானவர்!

முதல் ஒட்டக🐪 குர்பானி!

இரண்டாவது மாடு🐄!

மூன்றாவ🐐ஆடு என்றும்!

நான்காவது கோழி 🐔!

ஐந்தாவது முட்டை 🥚!

இறைவன் குர்பானி!

இசைந்து தரும் பாக்யமே!

இதையும் விட்டாலே!

இம்மை ஓர் கைசேதமே!

இமாம் வந்தால் மலக்குகள்!

இவ்வோலை சுருட்டியே!

இமாமின் பயானிலே!

இயல்பாகிடுவார்களே!

இமாமினருகினிலே!

இரு காதுகள் தாழ்த்தியே!

இறையோடு மவுனமாகவே!

இடைவெளியில்லாமலே!

உன் கல்பை மட்டுமல்லாது!

உன் அங்க ஒளியாக

மட்டுமல்லாது!

உன் பாவக்கரை நீக்க

மட்டுமல்லாது!

உன் எண்ணம் யாவும்

உனக்கு சமர்ப்பணக்க

உனக்கென வகுத்த நாள்!

இத்தனை நிஃமதான நாள்!

இறையிடம் பேசும் நாள்!

இரசூல் சுன்னத் பேணும்

நாள்!

இறுதிநாளின் சாட்சி நாள்!

இதுவே முஃமீனின் கிருபை

நாள்!

ஒரு ஜும்ஆ ஆரம்பம்

மறு ஜும்ஆ வரை

சிறிய பாவப் பரிகார

கேடய நாள்!

வரையறுத்த ஐவேளை

இடைபட்ட

பாவப்பரிகார நாள்!

மறு ஜும்ஆ _வின் நாள் முதல்!

மேலும்,3 நாள் பாவமும்!

மன்னிக்கும் புனித நாள்!

மட்டுமல்லாது

                مَن جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا ۖ

                وَمَن جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَىٰ

                إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ

ஒரு நன்மைக்கே!

மேலோன் 10 மடங்கு

பரிசு 🎁 டனே!

மேன்மை ஆக்குகிறான்!

அதே போல்,தீமை செய்பவன்!

அதே போல் தண்டிப்பான்!

அதே ஜும்ஆ _வில் தான்!

அல்லாஹ் பேச்சு இல்லாதவன்!

அனைத்து நன்மை இழக்கின்றான்!

அடுத்தவரின் பாவம் சம்பாதிக்கின்றான்!

நபியின் சுன்னத் எத்தனை!

நளினமாய் சொல்லி

எவ்விதமாய்!

நன்மைக்கு ஏவி உள்ளார்கள்!

நீ உன் குளிப்பு,முடி

வெட்டுதல்!

நகம்,நிற்கும்,உட்காரும் விதம்!

நாடுவது,நாடாதது என

நன்மை,தீமை பாதைக்கான

வழிமுறைகள்!

சுபுஹானல்லாஹ்!

சொல்லலாம் எத்தனை!

சாட்சி என்பதை மறவாதே!

சேர்ப்பது உனக்கு

ஜென்னாவே!

இம்மை,மண்ணுலகம்!

மறுமையின் மஹ்ஷர்!

மன்றாடும் போது நிற்கும்!

முஹம்மதின் முச்சுடர்!

முகப்பொலிவாய் மின்னும்!

முன்னோன் மகிழ்வான்!

முஹம்மதின் ப்ரியன்!

மன்னர் மஹ்மூத் அழைப்பு!

மகிழ்வாய் அமையும்!

புனித நாளினைபேணுவோம்!

பூமான் நபி நேசராவோம்!

படைத்தோன் ப்ரியரோவோம்!

படைப்பின் புனிதமாவோம்!

பிறவி பலன் அடைவோம்!

பேரின்பம் காண்போம்!

பாரில் நிம்மதியாள்வோம்!

படைப்பாளனில் சிரம் பணிவோம்!

கொரோனோ விரட்டிடவே!

கொடுத்தவனிடமே!

கொடூரத்தை கொடுக்கவே!

காப்பவனில்

சரணாகதியாவோம்!

காப்பான் காட்டையே!

காப்பான் நாட்டையே!

காப்பான் வீட்டையே!

காப்பான் இயற்கையே!

காப்பான் நீர் வளத்தையே!

காப்பான் நில வளத்தையே!

காப்பான் தொழில்

வளத்தையே!

காப்பான் கல்வி

வளத்தையே!

காப்பான் அனைத்து

வளத்தையே!

காப்பான் அங்கம்

அகத்தையே

காப்பான் ஆளும்

அவையத்தையே!

      அழகிய ஹக் திக்ரும்

     அஹ்மதரின் ஸலவாத்

          துதித்து நாவினில்

               நனைவோம்.!

                      ஆமீன் !!

                  யா  ரப்பே  !!

              என்  ஹுப்பே  !!

             ஸல்லல்லாஹு

             அலா முஹம்மத்

              ஸல்லல்லாஹ்

       அலைஹிவ ஸல்லம்💞

🖋நூர்ஷஃபியா காதிரியா

No comments: