Friday, June 4, 2021

இதய நன்றி இறைவா! நன்றியையே சொல்வோம் இறைவா!

 


இதய நன்றி இறைவா!

- கூ.செ.செய்யது முஹமது

(பல்லவி)

அருள்வளம் யாவிலும்

நிறைவைச் செய்தவன்

நன்றியையே சொல்வோம் இறைவா!

முகங்கள் யாவையும்

உன் புறம் கவிழ்ந்திட

நன்றி சொல்லிடுவோம் இறைவா!

(அநுபல்லவி)

அழகிய மார்க்கத்தில்

அற்புத வேதத்தில்

பிறந்திடச் செய்தவனே!

அழகிய மார்க்கத்தில்

அற்புத வேதத்தில்

பிறந்திடச் செய்தவனே!

நன்றி சொல்வோம் இறைவா!

நன்றி சொல்வோம் இறைவா!

(பல்லவி)

அருள்வளம் யாவிலும்

நிறைவைச் செய்தவன்

நன்றியையே சொல்வோம் இறைவா!

முகங்கள் யாவையும்

உன் புறம் கவிழ்ந்திட

நன்றி சொல்லிடுவோம் இறைவா!

(சரணம் 1)

ஒன்றுமில்லாத நிலையில் இருந்து

எங்களை உயிரூட்டி அமைத்தாய்.

தடைகளில்லாத நிலையில் இருந்து

எங்களை வளர்ந்திட வைத்தாய்

சுயமாய் செயல்பட வைத்தாய்.

உன் அமைப்பில் தானே எத்தனை கச்சிதம்

உன் படைப்பில் தானே எத்தனை அற்புதம்

உன் அருமையை தானே மறையில் படிக்கிறோம்

உன் சான்றுகள் தானே நாளும் காண்கிறோம்

என்றும் தினமும் நன்றி சொல்லுவோம்

(பல்லவி)

அருள்வளம் யாவிலும்

நிறைவைச் செய்தவன்

நன்றியையே சொல்வோம் இறைவா!

முகங்கள் யாவையும்

உன் திசை கவிழ்ந்திட

நன்றி சொல்லிடுவோம் இறைவா!

(சரணம் 2)

தூண்களில்லாத வெற்றிட நிலையில்

சூரியன் சந்திரன் அமைத்தாய்

தொடர்புமில்லாத பரவிய நிலையில்

மின்னிடும் நட்சத்திரம் வைத்தாய்.

அவைதனில் ஒளிவர வைத்தாய்

உன் கருணையில் தானே வானமும் பொழியுது

அனு சரணையின் பேரில் பயிர்களும் வளருது

உன் அனுமதியில் தான் நாட்கள் நகருது

உன் வெகுமதியில் தான் மறுமை இருக்குது

என்றும் தினமும் நன்றி சொல்லுவோம்

(பல்லவி)

அருள்வளம் யாவிலும்

நிறைவைச் செய்தவன்

நன்றியையே சொல்வோம் இறைவா!

முகங்கள் யாவையும்

உன் புறம் கவிழ்ந்திட

நன்றி சொல்லிடுவோம் இறைவா!

(அநுபல்லவி)

அழகிய மார்க்கத்தில்

அற்புத வேதத்தில்

பிறந்திடச் செய்தவனே!

அழகிய மார்க்கத்தில்

அற்புத வேதத்தில்

பிறந்திடச் செய்தவனே!

நன்றி சொல்வோம் இறைவா!

நன்றி சொல்வோம் இறைவா!

(பல்லவி)

அருள்வளம் யாவிலும்

நிறைவைச் செய்தவன்

நன்றியையே சொல்வோம் இறைவா!

முகங்கள் யாவையும்

உன் திசை கவிழ்ந்திட

நன்றி சொல்லிடுவோம் இறைவா!

--------------------------------

>>>>வீடியோ வடிவில்<<<<

பாடல்:

கூ.செ.செய்யது முஹமது

குரல் & ஒலிப்பதிவு

அதிரை ஜஃபருல்லாஹ்

படத்தொகுப்பு & இயக்கம்

முஃப்தி இனாயத்

நன்றி:

ஃபக்ருதீன் இப்னு ஹம்துன்

& தென்காசி சித்திக்

Visit: http://www.islamkalvi.com/?p=103914

No comments: