Tuesday, June 15, 2021

இறைசிந்தனை காலம்⏱அவனே!

 Noor Saffiya



இறைசிந்தனை

  காலம்அவனே!

காலங்கள் கரைந்து

விரைந்தோடுது!

காப்பவனில் கலந்த

விதம் தெரிய வந்தது!

கல்பில் நிறைந்த

கலிமா புரிந்தது!

கண்மணி ஹபீபினில்

கரைந்தது மனமது!

சிந்தை துளிகளும்

ஒன்றாய் கனிந்தது!

சந்தன மணமதில்

சர்தாரை நுகர்ந்தது!

சுகந்த நிலையதில்

சூட்சுமம் அறிந்தது!

சந்தங்கள் ஒலி,ஒளியில்

பிறந்திட!

பந்தங்கள் நேர்வழியில் இணைந்திட!

சொந்தங்கள் சேர்ந்து

மலர்ந்திட!

சோஃபன தீன் முழக்கம்

விழைந்திட!

தங்கமாய் அகத்தில்

ஒளிர்ந்திட!

அங்கங்கள் யாவுமே

மகிழ்ந்திட!

ஆவலாய் தேவைகள்

கிடைத்திட!

அழகிய நாட்களாய்

உதித்திட !

அளித்த நாள் நன்மையில்

பிறந்திட!

அழிக்கும் (கொரோனா)நாள்

கழிந்திட!

ஆட்சி நல்லதொரு

அமைந்திட!

அல்லாஹ்வின் அருள்

பெற்றிட!

அஹ்மதரின் ஆசியும்

நனைந்திட!

வேண்டிய உரிமைகள்

இயங்கிட!

வினவிய போராட்டம்

வென்றிட!

வெற்றி வெற்றி என்றே

முழங்கிட!

வேண்டிய காரியங்கள்

சித்திக்குமே!

கலிமாவின் ரகசியம்

கல்பில் பதிந்திட!

காப்பவன் காக்கும்

கடமை பெற்றிட!

கிடைக்கும் நாள் ஈமான்

காண பெற்றிட!

கண்கள் மகிழ்ந்திட

கல்பு குளிர்ந்திட!

நாட்கள் கடத்தாது  

நாயனே தந்ததிலே!

நாதர் நேசம் மட்டுமே

நீதம் தழைத்திடவே!

நாட்டின் நிலமை யாவும்

நேர்வழி பெற செய்வாயே!

நல்லடியாரினாலே

நாடும் வளமாகுமே!

நன்மை பலவும் பெற்றே

நலன்கள் அடைவோம்!

நில, நீர் வளமும் பெறும்

நன்னிலம் ஆக்குவோம்!

நேசமாய் விவசாயம்

நுண்ணியமா செய்வோம்!

இயற்கை நேசிப்பும்

இயல்பான வாழ்வும்!

இதயகமலம் அர்ஷின்

அமையும் தலமான

அமைப்பும்!

இரு கண்மணியும்

இறைரசூல் நெருக்க

இறைபணியும்!

இதுவே,காலத்தின்

இயல்பில் இணைந்தே!

இரசூல் கரமும் சிராத்தின் பாலத்திலும்!

இறுதி நேரத்தின் நிகழ்வில் சந்திப்பும்!

இறை சந்திப்பு மஹ்ஷரில் ஷஃபா அத்தும்!

காலமானவனே அறியும்

தருவாயாக்கினாய்!

கொரோனா பிடியில்

கொடிய சொல் செயல்

பிரித்து காட்டினாய்!

கொடுப்பவனும் நீயே!

கொடுத்து எடுப்பவனும் நீயே புரிதலாக்கினாய்!

இறையில் சிரம் பணியாதவர்க்கும்!

இயல்பு வாழ்வு எப்படி

என்பதற்க்கும்!

இயற்கை நேசிப்பு

எடுத்துகாட்டியதும்!

இன்னல்,பசி, வேலை,

இறப்பின் நிலைகாட்டியதும்!

குடும்ப உறவுகள்

கொடுத்து வைப்பவர்க்கே!

கோடி பணமிருந்தாலும்

காப்பவன் அவன் மட்டுமே!

காத்தல்,அழித்தல்,

ஆக்கலும் அளிப்பவனே!

காத்திடு நீ உன் கல்ப்

எனும் அகமே; என்றே!

காலம் கருதி கிடைத்த

காலமானவனில் நிலை!

காலம் உனக்கில்லை

கருத்தில் நிலை!

காலத்தில் பதில் சொல்ல

காவலனில் நிலை!

காலமானவனே கை

கொடுப்பவனில் நிலை!.

இதுவே உன் நியதி!

இதயத்தில் நீயும் பதி!

இறுதியில் உந்தன் விதி!

இறை உனக்கு தருவது

சொர்க்கப்பதி!

       அழகிய ஹக் திக்ரும்

     அஹ்மதரின் ஸலவாத்

          துதித்து நாவினில்

              நனைவோம்.!

                    ஆமீன் !!

                யா  ரப்பே  !!

            என்  ஹுப்பே  !!

          ஸல்லல்லாஹு

          அலா முஹம்மத்

          ஸல்லல்லாஹ்

    அலைஹிவ ஸல்லம்💞

🖋நூர்ஷஃபியா காதிரியா


No comments: