Wednesday, June 30, 2021

அலீ (ரலி) வரலாறு

 


அலீ (ரலி) வரலாறு

==================

நாகூர் ருமி

அபாவுக்குள்ளே பிறந்தீர்கள்

காசிம் நபியின் மடியில் கண் திறந்தீர்கள்

பேரீச்சம் பழம் மசித்து பெருமான் கொடுத்ததும்

வாஞ்சையுடன் வாயைத் திறந்தீர்கள்

முஹமது நபியின் முகத்தைத்தானே

முதன் முதலாகப் பார்த்தீர்கள்!

தூதர் முஹம்மதின் தூய உமிழ்நீர் கலந்த

பேரீச்சம் பழமே உங்கள் முதல் உணவானது!

அன்னை இட்ட பெயர் அஸத்

தந்தை இட்ட பெயர் அலீ

தொட்டிலில் கிடந்த உங்களைத்

தீண்டவந்த அரவத்தை

பிஞ்சுக் கைகளால் கொன்ற

அரேபிய ஹெர்குலிஸ் நீங்கள்!

அலீ என்று சொன்னால்

அத்தனையும் நடுங்கும்

அச்சத்தில் ஒடுங்கும்

அபூதாலிப் ஃபாத்திமாவின் மகன்

வீரத்தில் பகைவர் நடுங்கும் தகன்

வீரத்தின் மறுபெயர் அலீ

விவேகத்தின் மறுபெயரும் அலீ

அப்துல் முத்தலிபுக்குப்பின்

அண்ணலை அரவணைத்தார் அபூதாலிப் -- பின்னர்

அலீயை அரவணைத்தார்கள் அண்ணல்

தொடரும், இன்ஷா அல்லாஹ்... -

No comments: