Wednesday, June 30, 2021

அலீ (ரலி) வரலாறு -- 2

 


அலீ (ரலி) வரலாறு -- 2

=================

நாகூர் ருமி

அல்லாஹ்வின் தூதரும்

அன்னை கஜீதாவும்

அல்லாஹ்வைத் தொழுவதை

அலீ பார்த்தார்கள்

அதுபற்றி அண்ணலிடம் கேட்ட அலீ

அன்றே இஸ்லாத்தை ஏற்றார்கள்

இஸ்லாத்தை ஏற்ற முதல் பெண்மணி

அன்னை கதீஜா

முதல் சிறுவர்

அருமை அலீதான்!

தொழுகையைத் தூதர்

தூய இஸ்லாத்தில் இணைந்த

தோழர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் முன்பே

தொள்ளாயிரம் தடவைக்கும் மேலாக

தூதருடன் சேர்ந்து

தொழுதிருக்கிறார் தூய அலீ!

அலீ அவர்களை அனுப்பி

அரேபியக் குறைஷிகளை

விருந்துக்கு அழைத்தார்கள்

ஆண்டவனின் தூதர்

ஆக்கைக்கு விருந்து முடிந்த பின்னர்

ஆன்மாவுக்கான விருந்தான இஸ்லாத்தை

அண்ணல் எம்பெருமான்

அவர்களிடம் எடுத்துரைத்தார்கள்

வந்தவர்கள் நகைத்தார்கள்

வகைவகையாய்க் கொதித்தார்கள்

நான் இருப்பேன் நாயகமே உங்களோடு என்று அலீ

மூன்று முறை உரைத்தார்

மூத்தவர்கள் முன்னிலையில்

மூஸாவுக்கு ஹாரூனைப்போல

முஹம்மதுக்கு இந்த அலீ என்று

மூன்று முறை சொன்னார்கள்

முஸ்தஃபாவும் அங்கேயே

தொடரும், இன்ஷா அல்லாஹ்...

No comments: