Tuesday, June 8, 2021

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் நூர்ஷஃபியா காதிரியா அவர்கள்

 அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் நூர்ஷஃபியா காதிரியா அவர்கள் 



சாதனைகள் பெண்களுக்கும் தடையில்லை. நூர்ஷஃபியா காதிரியா அவர்களும் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தாலும் நூர்ஷஃபியா காதிரியாஅவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார். உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர். இந்த வழியில் நூர்ஷஃபியா காதிரியா அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)


'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

நூர்ஷஃபியா காதிரியா அவர்கள் சிறந்த கவிஞர்  .அவர்களுடன் ஒருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். சென்னையில் அவர்கள் இருந்தாலும் தற்போது வெளிநாட்டில் தங்கள் குடும்பத்துடன் இருந்து வருகின்றார்கள் .அவர்கள் தங்களைப்பற்றி எதையும் தெரியப்படுத்துவதில்லை .இருப்பினும் அவர்கள் மிகவும் மார்க்கப்பற்று உள்ளவர்கள் .தனது கவிதைகள் அனைத்தும்  இறைசிந்தனை பற்றியதாகவே இருக்கும் 

இறைசிந்தனை


அல்லாஹ் அமைத்தான்

அங்கத்திலே!

அழகாய் கை,விரல்கள் 

என நம்மிலே!

அதிலே ஒர் விரல்

ஒருவனை குறிக்க!

அவ் விரலினையும்

கலிமாவாயாக்கினான்!


நான்கு விரல்களையும்

தன்னடக்கமாக்கினான்!

நான்கு திசையும் நாயனின் தரிசனத்திலே!

நாலா திசை இல்லாது

சிரம் பணிய வைத்தான்!


நாலடியார்களை 

நமக்கு தந்தானே!

நாயன் அபூபக்கர்,அலி,

உமர்,உதுமான, என

நாதர் காலத்து வாழ்வின்

நீதமும்,நேர்வழி பாதைக்கே!

உன் உள்ளம் தூய்மை

எனில் உன்னுடைய

உள்ளங்கையின் சுத்தம் 

உன்னில் காட்டிடுமே!

ஒவ்வொரு முறை நீ செய்யும் ஒலுவினாலும்,

ஓதும் சலவாத்தின் 

பரக்கத்தாலும்!


முகமும்,அகமும்,அருட் 

ப்ரகாசமாய்!

முத்துநபியின் நூரினை

பெற்றிடுமே!

இறைவன் இல்லத்தில்

இரு கைகளையும்!

இரசூலின் அழகிலே

பணித்தான் இறைவனுக்கே!

நூர்ஷஃபியா காதிரியா


https://www.youtube.com/channel/UCN-P5vING1gSBRJzoB1gwXw/about

https://www.youtube.com/channel/UCN-P5vING1gSBRJzoB1gwXw/videos


அவரது கவிதைகளை எமது வலைதளத்தில் மற்றும் வலைப்பூவில் அவர்கள் அனுமதியுடன் வெளியிட்டு மகிழ்வேன்.

இவரது முகநூல் முகவரி Noor Saffiya https://www.facebook.com/noor.saffiya.7

அவரை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்

இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை  பிரார்திக்கின்றோம்

Jazaakum'Allah Khairan.

நன்றி

"May Allâh reward him [with] goodness.".

அன்புடன் 

by mohamedali jinnah முகம்மது அலி ஜின்னா 

No comments: