Thursday, December 31, 2020

தமிழுக்கும் அமுதென்று பேர் / அன்புடன் கவிஞர் புகாரி

 


தமிழுக்கும் அமுதென்று பேர்

======================

என்னுடைய நிகழ்ச்சி கனடா TET தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது 

2021 புத்தாண்டு நாளில் மதியம் 12 மணிக்கு

12 pm Eastern Time Canada

தமிழ் மரபுத் திங்கள் பெருவிழா - புத்தாண்டுத் திருவிழா

---------------------------------------------------------------------

கவிஞர் புகாரியின்

எங்கள் தமிழ் மன்றமும்

TET தமிழ் மனமகிழ் தொலைக்காட்சியும்

இணைந்து வழங்கும்

தமிழுக்கும் அமுதென்று பேர்

என்ற தலைப்பில்

ஒரு தமிழ் நிகழ்ச்சி

o

இது

உயிர்மலரும் ஓர்

உணர்வுப் பூமழை நிகழ்ச்சி

o

இது

தமிழின்

இனிமையை போற்றும் நிகழ்ச்சி

o

இது

தமிழனின்

வெற்றியைப் பாராட்டும் நிகழ்ச்சி

o

தமிழ் மரபுத் திங்களை

ஆரவாரத்தோடு வரவேற்கும்

வரவேற்பு நிகழ்ச்சி

o

தமிழன்னையின் நெற்றியில்

முத்தத் தடங்கள் பதிக்கும்

தமிழ்ப்பாச நிகழ்ச்சி

o

தமிழ்த்தாயின் மடிகளில்

பூமழை பொழியும்

தமிழ்நேச நிகழ்ச்சி

O

இந்நிகழ்ச்சியைக் காண

வண்ணக் காலெடுத்து

வடிவாய்ப் புலம்பெயர்ந்து

புவி புகழ சிறந்து வாழும் தமிழுக்கு

என் வணக்கமும்

o

தமிழ்மரபுத்திங்கள் வாழ்த்துக்களும்

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்

பாலையோடு பனியையும் சேர்த்துக்கொண்ட

ஆறு நிலக் கனடிய தமிழ் மண்ணுக்கு

என் வணக்கமும்

o

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களும்

உலகெங்கும்

காலூன்றிக் கோலூச்சும்

தமிழர் வெற்றிக்கு

என் வணக்கமும்

o

மலரக் காத்திருக்கும்

பொங்கல் வாழ்த்துக்களும்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

என்று வாழும்

அனைத்துலகத் தமிழர்களுக்கும்

நஞ்சையும் புஞ்சையும்

கொஞ்சிடும் தஞ்சையில்

பிறந்த தமிழ் நெஞ்சன் 

இந்த புகாரியின் வணக்கமும்

புலரப் புறப்பட்டிருக்கும்

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களும்

அன்புடன் புகாரி


No comments: