Thursday, December 31, 2020

வாழ்த்துகள் ரியாசுதீன்!

வாழ்த்துகள் ரியாசுதீன்!



உலகின் எடை குறைந்த செயற்கைக்கோள்களை வடிவமைத்து

தஞ்சை மாணவர் சாதனை.

அறிவியல் துறையில் அதுவும் குறிப்பாக விண்வெளித் துறையில் தமிழர்கள் தன்னிகரற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக   உலகின் எடை குறைந்த செயற்கைக்கோள்களை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார் மாணவர் ரியாசுதீன். 

தஞ்சாவூரை சேர்ந்த இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிடெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார். அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் மிகுந்தவர்.  அமெரிக்காவை சேர்ந்த ‘I Doodle Learning’ நிறுவனம் நாசாவுடன் இணைந்து நடத்திய புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் 2019-2020க்கான ‘cubes in space’ போட்டியில் கலந்து கொண்டு தேர்வாகியுள்ளார்.

73 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்ட போட்டியில் இரண்டு செயற்கைக் கோள்களை வடிவமைத்துள்ள  ரியாசுதீன் இதற்கு  விஷன் சாட் V1 மற்றும் V2 என்று பெயரிடப்பட்டுள்ளார். இரு செயற்கைக்கோள்களும்  33 கிராம் எடையுடையது. இது உலகிலேயே மிகவும் எடை குறைவான பெம்டோ (Femto) செயற்கைக்கோள்கள் ஆகும்.

இந்த செயற்கைக்கோள்கள் வளிமண்டல மற்றும் விண்வெளி ஆய்வுகள் மற்றும் மைக்ரோ கிராவிட்டி பொருள் ஆராய்ச்சி குறித்த ஆய்விற்கு உதவும். இதில் 11 சென்சார்கள் உள்ளன. அதன் மூலம் 17 பாராமீட்டர்களை கண்டறிய முடியும்.

நாசாவில் இருந்து வரும் 2021 ஆம் ஆண்டு இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இன்று காலை சாதனை மாணவர் ரியாசுதீனை  தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். உற்சாகமாக பேசிய அவர் தனது ஆராய்ச்சிகள்; அதன் பயன்பாடுகள்  பற்றி விளக்கினார்.

மாணவர் ரியாசுதீன் இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்.



. பி.எம். இப்ராகிம்

No comments: