Monday, December 7, 2020

எப்படி கனடாவின் குடிவரவாளராய் ஆவது? / அன்புடன் புகாரி

 


எப்படி கனடாவின் குடிவரவாளராய் ஆவது? / 

போகப் போகக் கடினமாகிக்கொண்டே இருக்கிறது கனடிய குடிவரவுச் சட்டம்.

மகனையோ மகளையோ கல்வி கற்க கனடா அனுப்பி வைத்தால் போதும் குடும்பமே அவரோடு கனடா வந்துவிடலாம்.

பஞ்சாபிலிருந்து படைபடையாய்க் கனடாவுக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் தமிழ்முஸ்லிம்கள் வழக்கம்போலவே இதிலும் உறங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

கல்வியும் செல்வமும் ஒருசேர வேண்டும் என்று தமிழ்முஸ்லிம் நினைப்பதில்லை.

செல்வம் மட்டுமே எப்படியாவது வேண்டும் என்றுதான் நினைக்கிறான்.

இது என்ன வகையான அறிவுச்செறிவு என்று எனக்குத் தெரியவில்லை.

மற்ற நாடுகளைப் போல கனடாவுக்குள் குடியேறுவது எளிதான காரியமல்ல.

இதற்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான்.

புதிதாக வரும் குடிவரவாளரால் கனடா நலம் பெறுமா பெறாதா என்றுஅரசால் பார்க்கப்படும்.

அதன் அடிப்படையில் மட்டுமே குடிவரவாளர்கள் ஏற்றுக்கொள்ளப்படுபவார்கள்.

இந்தத் தகுதிவழி வரவு அன்றி, ஏற்கனவே குடிவரவாளர்களாய் இருப்பவர்களின் துணையும், பிள்ளைகளும், பெற்றோரும் குடிவரவாளர்களாய் ஆகமுடியும்.

தங்களுக்குக் தகுதி இல்லாதவர்கள் அல்லது வயதேறியவர்கள் கனடாவுக்குக் குடிவரவாளர்களாய் ஆக மிக எளிய வழி கல்வி கற்க பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பி வைப்பதுதான்.

கனடாவின் கல்லூரியிலோ பல்கலைக்கழகத்திலோ அனுமதி பெற்று ஏதேனும் ஒரு படிப்பைக் கற்கவந்தால், அவர்களுக்குக் குடிவரவாளர் ஆகும் வாய்ப்பு 99 விழுக்காடு ஆகும்.

இது தொடர்பாக உங்களுக்குள் எழும் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்ததை என்னால் இயன்றதைச் சொல்லி உதவுவதற்காகவே இந்த இடுகையை நான் இங்கே இடுகிறேன்.



அன்புடன் புகாரி

No comments: