இறைவன்
தந்த பரிசு
ஏகத்துவத்தின்
முரசு
தியாகத்திற்கே
சிரசு
தீன் போற்றும் அரசு
வல்ல நாயன் தோழர் மாமணி
வந்த குர்பானின் மூல காரணி
இபுராகீம்
நபியின் வாழ்வெல்லாம் பாடம்
இறையோனின்
வாழ்த்து
குர்ஆனின்
மூலம்
அவர் வழி போற்ற
வந்தத்
திருநாள்
வள்ளல்
நபி சொன்ன
ஹஜ்ஜுப்
பெருநாள்
தியாகத்தை
போற்றும் திருநாள்
தீனோரின்
ஹஜ்ஜுப் பெருநாள்
(இறைவன்...)
இறைவனின்
ஆணையை
சட்டென
முடிப்பதில் முதலாய் நின்றவர் நபி
இபுராகிமே
இது ஏன் எதற்கென
கேள்வி
இல்லாமலே
எதனையும்
செய்ததால் வென்றவர் அவர்களே
நபி நாதர் மஹ்மூதர் இவர்
வம்சமே
இப்ராகிம்
அஹதோனின் உயர் நேசமே
அவர் நினைவேந்தி வந்ததிந்த
ஹஜ்ஜுப்
பெருநாள்
அகம் நிறைவாக்கும் இந்த
தியாகத்
திருநாள்
(இறைவன்...)
நெருப்பு
குண்டமும் குளிரை தந்ததே
நிலையில்
குழையாத அவர் ஈமான் வென்றதே
உணவு நேரத்தில் விருந்தினர் இன்றியே உண்ணும் வழக்கமே
அவருக்கு இல்லையே
கனவில்
தன் மகனை பலி கொடுக்கக்
கண்டார்
கனம் கூட நில்லாமல் மகனுடன்
சென்றார்
அல்லாஹ்
தன் அருளாலே ஆட்டைத் தந்தான்
அதனாலே
குர்பானி கொடுக்கக் கண்டோம்
(இறைவன்...)
Here is our new song " Iraivan Thandha Parisu "
written by Kayal Elavarasu. This song is based on the history of Bakrid and its
story.
Subscribe to our channel for more updates.
Music composed by Kanmani Raja
Lyrics by: Kayal R.S.Elavarasu
Programming: Tajmeel sherif
Singer: Tajmeel Sherif
Produced by: zirani
Like Us - https://www.facebook.com/ziranimusic/
Follow us -https://www.youtube.com/channel/UC7Tz...
https://twitter.com/ZIRANI05
#Tamilislamicsongs #Bakrid2020 #TajmeelSherif
No comments:
Post a Comment