Friday, December 11, 2020

"நீங்கள் ஏன் இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பதத்தை பயன்படுத்த மறுக்கிறீர்கள்?" - அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம்

 

"நீங்கள் ஏன் இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பதத்தை பயன்படுத்த மறுக்கிறீர்கள்?" - அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், நேற்று (28-9-16), சிஎன்என் அதிபர் டவுன் ஹாலில் நடைபெற்ற கலந்துரையாடலில் கேட்கப்பட்ட கேள்வி இது. ஒபாமா என்றில்லை, தற்போதைய அதிபர் வேட்பாளாரான ஹிலாரி கிளிண்டன் கூட இந்த பதத்தை பயன்படுத்த மறுத்தே வந்துள்ளார். வலதுசாரிகளின் கடுமையான விமர்சனத்தை இதற்காக சந்தித்துள்ள ஒபாமா இந்த கேள்விக்கு எப்படி பதில் அளித்தார் என்பதை சற்று முன்பாக சிஎன்என் பிரசுரித்துள்ளது.

"இந்த நாடு உட்பட உலகில் வாழும் பில்லியன் கணக்கான முஸ்லிம்களை காணுங்கள். அவர்கள் அமைதியையே விரும்புகிறார்கள். இந்த நாட்டை கட்டமைப்பதில் அவர்கள் பங்காற்றியிருக்கிரார்கள். இந்நாட்டின் இராணுவத்தில், காவல்துறையில், தீயணைப்பு துறையில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.ஆசிரியர்களாக , நம்முடைய பக்கத்து வீட்டுகாரர்களாக, நண்பர்களாக இருக்கும் அவர்களை, கொலையாளிகளுடனும்  தீவிரவாதிகளுடனும் தொடர்புப்படுத்த வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? ஒரு போதும் மாட்டேன்.

ஒரு கிறித்துவனாக, ஒரு இயக்கம் கொலைகளை செய்துவிட்டு, நாங்கள் கிருத்துவத்தை பாதுகாக்கவே இதனை செய்கிறோம் என்று சொன்னால், ஆம் நீ ஏசுவுக்காக இதனை செய்கிறாய் என்று நாம் ஒத்துக்கொள்வோமா அல்லது இது முட்டாள்தனமானது என்று கூறுவோமா? இவர்கள் கொலையாளிகள் தீவிரவாதிகள். இவர்களை அவர்களுக்கான இடத்தில் வைப்போம். மாறாக, மதத்தை இவர்களுடன் தொடர்புப்படுத்தவேண்டாம்"

சிஎன்என் இதுக்குறித்து பிரசுரித்த செய்தியை முழுமையாக படிக்க: http://edition.cnn.com/.../obama-radical.../index.html

No comments: