* சிருஷ்டியும்.....சமிக்ஞையும்.....!
Sothugudiyan
* உணர்வுகள்,
எண்ணங்களை
எழுத்து
வழி தருவோர் படைப்பாளியெனக் கருதப்படுகின்றார்!
* எழுத்தை
எழுதுவோர் வேறு; எழுத்தை ஆளுபவர் வேறு!
இருவரும்
ஒன்றென்று சமர் புரிதலிருக்கின்றது!
* மழைக்
கால மின்னலாக தோன்றி மறையக் கூடியன சிந்தனைகள்!
* தன்னுணர்வுத்
தளத்தில் காலூன்றியிருப்போர், மறுக்கவியலா அனுபவத்தை ; அனுபவித்தலை; மறைக்கவியலா சமூக அவலங்களைப் பேசலாம், தீர்வு கூறலாம்!
* மரபுகள்
வழியாக நவீன உலகினுள் பிரவேசிப்போம்!
* முகந்திருப்பாது;
மனஞ் சலியாது பகைப் புலங்களை, கணிப்பீடுகளை எதிர் கொள்வோம்!
* இடைக்கிடையே
உயிர்த்தெழுந்து உரசிச் செல்லும் காற்றைப்போல் அக, புற வயப்படுதலிருக்கின்றது!
* ஒன்றியிருக்கவியலாமல் துயரப்படுகிறோம்!
* அரவமற்ற
வெளியில் நிற்கும் ஒற்றைப் பனையாக வாழ்வு திணித்தலுக்குள்ளாகின்றது!
* தோள்
தரும் முதுகெலும்பின் மீதேறி சமைக்கப்படும் சிம்மாசனம்!
* காற்றும்,
கனலுமாய்க் கடக்கும் வாழ்வும், மரணமும்!
* உழவு
செய்தல், நாற்று நடுதல், களை பறித்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல் ஒன்றும் செய்யாது அறுவடைக்கு அணிவகுத்தல்!
* நீர்மை
காய்ந்து போன நெஞ்சங்கள்; உரு மாறிய வாழ்வின் போக்கு!
* மலை
மேல் கவிழும் முகிலின் திரள் போல் ஆன அகங்கள்!
* கருத்துகளை
சிருஷ்டிப்பவன்;
சமிக்ஞைகள்
வழியாக மனங்களில் சதிராடுகிறான்! உரையாடுகிறான்!
* குளிர்
அறிதலுக்கும், சூடு உணர்தலுக்கும் அப்பாற்பட்டது ஆன்மா! இருமையில்லாதது!
{சோதுகுடியான் பதிவு:13/12/2020}
No comments:
Post a Comment