Saturday, November 17, 2018

ஏன் பிறந்தேன்!

Vavar F Habibullah


இன்று காலையில்...
தம்பி டாக்டர் தனசிங் சாத்தூரில் இருந்து போன் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அரசியல் நகைச்சுவை கலந்து பேசும் நல்ல அரசு மருத்துவர் அவர்.

சார்..பிறந்த நாள் என்றாலே அது
நம் நாட்டில் அரசியல் தலைவர்களை போற்றி புகழ் பாடும் நாளாயிற்றே..!
தொண்டர்கள் புகழ்ந்து பேசினால்
அண்ணாவாக இருந்தால் தம்பி என்பார்.
கலைஞர் என்றால் உடன் பிறப்பே என்பார்.
எம்ஜிஆர் என்றால் ரத்தத்தின் ரத்தமே என்பார்.


என்னை போன்ற இளம் மருத்துவர்கள்
நான் ஏன் பிறந்தேன் என்று கேள்வி கேட்டால்! உங்களையும் சேர்த்துத் தான்......
கேள்வியின் நாயகனே! என் கேள்விக்கு பதில் என்ன என்று தனசிங் கேட்டதின் அர்த்தம் புரிந்தது.

நான் சொன்னேன்....
டாக்டர் தனசிங்..
குழந்தைகள் தான் பின்னாளில்
தலைவர்களாக உருவாகிறார்கள்.
நோயின் பிடியில் சிக்கி உயிருக்கு போராடும் ஒரு குழந்தையின் உயிரை முயன்றால்,இறை அருள் இருந்தால் என்னால் நிச்சயம் காப்பாற்ற முடியும்.
இதனாலேயே நான் ஏன் பிறந்தேன்
என்று என்னை நான் ஒரு போதும்
கேள்விகள் கேட்டு கொள்வதில்லை.
நான் உயிர் வாழும் வரை இது தொடரும்.

பிறந்த நாள் வரும் போகும்
பிறப்பும் இறப்பும் ஒட்டிப் பிறந்த
இரட்டைக் குழந்தைகள்
முதுமையின் முகவுரை தான் இளமை.

வருங்கால முதல்வர்களை,பிரதமர்
களை இந்த நாட்டை கட்டி ஆளப் போகிறவர்களை நோயின் பிடியில் இருந்து காப்பாற்றும் அரிய தூய சேவையை தான் நாம் அநுதினமும் தொய்வின்றி செய்து வருகிறோம்.

வயதின் எண்ணிக்கையை விட
நல்ல நண்பர்களின் எண்ணிக்கையே
வாழ்வில் சுவை பயக்கும்.என்
நண்பர்கள் அத்துணை பேருமே
இன்று எனக்கு பிறந்த நாள் வாழ்த்தை
(through all channels)
அன்பாய் பொழிந்திருக்கிறார்கள்.
அனைவருக்கும் என் அன்பான நன்றி.
in fact I always count my age by friends
not by years.
Vavar F Habibullah

No comments: