மழை
பனி
குளிர்
வெயில்
இவைகளுக்கு தாக்குப்பிடிக்க மட்டுமா ஆடை ?
அனைத்துக்கும் மேலாக மானத்தை பாதுக்காக்கும் ஆடை.
ஆடை அணிவது நாகரீகத்தின் வெளிப்பாடு .
வார்த்தைகளால் சொல்வது மட்டும் நன்றி அல்லது வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதுமோ ?
அது வெளிப்படும் இடம் உள்ளத்தின் நாதமாக இருத்தல் வேண்டும் .
இறைவா ! உன்னை நினைத்து உருகியவனாய் நன்றியுடையவனாய் இருப்பேன் .
அதனை மறைமுகமாகவும் .வெளிப்படையாகவும்
சொற்களினால் மற்றும் செயல்களால் வெளிப்படுத்தி
உன்னிடம் இறைஞ்சி நிற்ப்பேன்
அதற்கு உனது அருளும் அங்கீகாரமும் வேண்டும்
நன்றியுணர்வு இதயத்திலிருந்து தொடங்கி நாக்கு நரம்பு மண்டலத்திலிருந்து வெளிப்படுகின்றது
ஒரு பக்தனின் நன்றியுணர்வு
அவருக்கு கிடைத்த பலன்களின் நன்மைக்காக
அவனின் அருள் கிடைத்தமைக்கு
நன்றி செலுத்துகிறார்
அவனின் ஆசீர்வாதத்தினை நாடுவதும்
அதன் பொருட்டு அவனை உள் அங்கீகாரத்துடன் பாராட்டுதலும், அதை வெளிப்படையாகப் பேசுவதும், அவனை வணங்குவதற்கான வழியாக பயன்படுத்தப்படுவதும் உயர்வான செயலாகவே அமையும்
No comments:
Post a Comment