அறிவியலின் படு வேகமான வளர்ச்சி. இனி கைவலிக்க தமிழில் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமில்லை. தரப்பட்டுள்ள முறையை கையாண்டால் நாம் பேசுவது அப்படியே தமிழில் தட்டச்சு செய்யப்பட்டு விடும்.
இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.முயன்று பாருங்கள் மிகச் சிறப்பாக செயல்படுவதை உணர்ந்து கொள்ளலாம்.எவ்வளவு பெரிய பதிவாக இருந்தாலும் எளிதாக இரண்டு நொடிகளில் தட்டச்சு செய்து விடலாம்.
அந்தச் செயல் முறையை கீழே தந்துள்ளேன். இத்தகைய அருமையான செயலியை உருவாக்கிய பொறியாளர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
வாட்ஸ் ஆப் மற்றும் ஃபேஸ்புக்கில் தமிழில் பதிவிட புதிய செயலி ..
வாட்ஸ் ஆப் மற்றும் முகநூலில் அழகிய தமிழ்.....
கைவலிக்க இனி தமிழில் டைப் செய்ய வேண்டாம்.
தமிழ் எழுதத் தெரியவில்லையே என்ற கவலை வேண்டாம்.
தமிழ் டைப்பிங் கஷ்டம் என்பது இனி இல்லை.
ஆச்சரியம், அருமை.
எழுத்துப்பிழை இல்லாமல் தமிழில் வார்த்தைகள்
நீங்கள் பேசினாலே தமிழில் அதுவாகவே டைப் ஆகிறது
வழி என்ன?
Play Store செல்லவும்.
Gboard app என டைப் செய்து download செய்யவும்..
Input language ல் தமிழ் செலக்ட் செய்ய வேண்டும்.
அதில் gboard ஐ செலக்ட் செய்ய வேண்டும்.
வாட்ஸ் ஆப் போகவும்.
வழக்கம்போல இருக்கும் கீபோர்டு, சற்றே வித்தியாசமாகத் தெரியும்
தமிழ் கீ போர்டை செலக்ட் செய்யவும்.
Keyboard
மேலே வலதுபுறம் பச்சை கலர் மைக் இருக்கும்.... அதில் பேசக்கூடாது....
அந்த பச்சைக் கலர் மைக்குக்கு கீழே,
கருப்புக் கலரில் சின்ன மைக் இருக்கும்.
Just அதை பிரஸ் செய்துவிட்டு கையை எடுத்துவிடலாம்.
speak now என வரும்
நீங்கள் பேசினால் உடனே தமிழில் டைப் ஆகும்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்......
தூய தமிழில் பேச வேண்டும்
செய்தி வாசிப்பாளர்களைப் போல தெளிவாகப் பேசினால், வார்த்தை மாறாமல், பிழை இல்லாமல் அச்சு அசலாக நீங்கள் டைப் செய்தது போலவே வரும்
முயற்சி செய்து பாருங்கள்
எழுத்துப்பிழை இல்லாமல், மிக அழகாக ஒலி எழுத்து வடிவம் பெறும் அறிவியலின் அற்புதம்... பயன் படுத்துங்கள்… பயன் பெறுங்கள்.
அன்புடன்,
வே. சுப்பிரமணியன், சென்னை
http://www.chendurtoday.com/2
No comments:
Post a Comment