Wednesday, November 14, 2018

புனித மக்கா மாநகரில் / அவசியம் படியுங்கள்


பத்து வருடங்கள் புனித
மக்கா மாநகரில் பிரசித்தி
பெற்ற மருத்துவமனையில்
குழந்தைகள் நலம்,
அடோலசண்ட் பிஸிசியன்
மற்றும் அடோலஸண்ட்
சைக்கலாஜி.. ஸ்பெசலிஸ்ட்
மருத்துவராக பணி புரிந்த
அநுபவம் இன்றும் மறக்க
இயலாத ஒன்று.

வெளி நாடுகளில் மருத்துவராக
பணி புரிவது என்பது அவ்வளவு
எளிதான விசயம் அல்ல.
அமெரிக்கா,லண்டன் போலவே
இங்கும் மிகவும் கடுமையான
தேர்வுகளில் பாஸ் செய்தால்
மட்டுமே MOH சர்டிபிகேட்
கிடைக்கும்.மக்கா மதீனா
நகரங்களில் அதிகம் இண்டர்
நேஷனல் பேசியண்ட்ஸ் வந்து
போவதால் மிக மிக திறமை
வாய்ந்தவர்களே இங்கு
டாக்டர்களாக பணி புரிய
முடியும்.


நான் இங்கு வந்த நேரம்...
மருத்துவ தேர்வுக்காக
என்னை முதலில் மக்கா
நகரில் அமைந்த பிரபல அரசு
குழந்தைகள் மருத்துவமனைக்கு
வர சொன்னார்கள்.

மூன்று நாட்கள் அங்குள்ள மூத்த
டாக்டர்களுடன் வார்டுகளில்
ரவுண்ட்ஸ் வர வேண்டும்.நோய்
பற்றிய எந்த கேள்விகளுக்கும்
சரியாக பதில் தர வேண்டும்.
சீனியர் மருத்துவர்களுடன்
ஓபி யில் அமர்ந்து பேசியண்ட்ஸை
டிஸ்போஸ் செய்ய வேண்டும்.

என்னிடம் மட்டுமே மூன்று
நாட்களில் ஒரு ஐம்பது
எக்ஸ்ரேக்களை காட்டி
பதில் தர சொன்னார்கள்.
கேஸ் டிஸ்கசன் என்று வரும்
போது பல ஸ்பெசலிஸ்ட்கள்
மத்தியில் நமது ஒபீனியன்
பற்றி கேள்வி கேட்பார்கள்.
பின்னர் டைனிங் ஹாலுக்கு
உணவு அருந்த அழைத்து
செல்வார்கள். நாம் உண்ணும்
அழகை கூட அவர்கள் கவனித்து
அதற்கும் மார்க் போடுவார்கள்
என்பது எனக்கு பிறகு தான்
தெரிய வந்தது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்
களை நேரடி இண்டர்வியூக்கு
அழைப்பார்கள். இந்த தேர்வு
பெரும்பாலும் ஜித்தாவில்
வைத்து நடை பெறும்.
உத்தேசமாக ஒரு பத்து பேர்
தேர்வு கமிட்டியில் இருப்பார்கள்.
சிறு அறிமுகத்திற்குப் பின்
கேள்விகள் கேட்கப்படும்.

தலைமை டாக்டர் பேசுவார்
டாக்டர்...பீ கேர்ஃபுல்..வீ ஆர்
நவ் கோயிங் டு ரிகார்ட்
யுவர் ஆன்சர்ஸ்...
டேப் ஆன் ஆகி விடும்
பேசுவது எல்லாம் பதிந்து விடும்.
தேர்ட்டி மினிட்ஸ் பிய்த்து உதறி
விடுவார்கள்.என்ன தான்
ஸ்மார்டாக பதில் தந்தாலும்
இந்திய டாக்டர் என்பதால்
சற்று நையாண்டியும் கலந்து இருக்கும்.

என்னிடம் அன்று கேட்கப் பட்ட
கடைசி கேள்வி...
ஒகே..நவ் கம் டுத பாயிண்ட்..
103 டிகிரி காய்ச்சலில்
அவதிப்படும் குழந்தையை
உன்னிடம் கொண்டு வருகிறார்
குழந்தையின் தாய்....
காய்ச்சலைக் குறைக்க நீ
உடனடியாக என்ன செய்வாய்
சொல்!

பாரசடமால் இன்ஜெக்சன்
கொடுப்பது இந்தியாவில்
வழக்கம் சார்..
நான் சொன்னேன்.
அவ்வளவு தான்...

வாட்....!
பேரசடமால் இன்ஜெக்சன்
போடுவீங்களா..!
கால் சம் இண்டியன் டாக்டர்ஸ்..

அதிர்ஷ்ட வசமாக நமதூர்
டாக்டர் அப்துல்லா அங்கு
வந்தார்.
எஸ் சார்...இந்தியாவில்
பேரசடமால் இன்ஜெக்சன்
போடுவது உண்டு.
ஒரு வழியாக நான் தப்பித்தேன்
பாஸ் தந்து விட்டார்கள்.
பாரசடமால் இன்ஜெக்சன் அங்கு
தடை செய்யப்பட்ட விசயம்
பிறகு தான் எனக்கு தெரிந்தது.
நமதூரில் இன்றும் அதை
காய்ச்சல் தீர நரம்பு வழியாக
கூட கொடுத்து வருகிறோம்
என்பதே உண்மை.

நான் பாஸ் ஆனதால் மருத்துவமனை
நிர்வாகம் சந்தோஷத்தில் மிதந்தது.
பெரிய பிரமுகர்கள் எல்லாம் டின்னர்
பார்டியில் கலந்து கொண்டார்கள்.
கேரளாவின் அமைச்சர் பெருமக்கள்
சிகாப் தங்கள் போன்றோர் எனது
நண்பர்கள் ஆனார்கள்.தமிழகத்தில்
இருந்து வரும் ஜஏஎஸ்,ஐபிஎஸ்
அதிகாரிகள் உட்பட பல
பிரமுகர்கள் மக்காவில் எனது விருந்தினர்கள் அல்லது பேசியண்ட்ஸ் என்று சொன்னால்
அது மிகை அல்ல.பெரும்பாலான
எனது நண்பர்களை,உறவினர்களை
மக்கா நகரில் சந்தித்து மகிழ்ந்ததை
இன்றும் என்னால் மறக்க இயலாது.

சென்னையை சார்ந்தவர்கள்
என்பதால் நான் ,டாக்டர்
அன்சர்தீன், தமிழ் பேசும்
மலப்புரம் டாக்டர் சலீம்
எல்லாம் மக்காவில்
வாழும் இந்திய குடும்பங்களின்
நிரந்தர விருந்தினர்கள்.இந்திய
மன்றங்களில் நடக்கும் நிகழ்ச்சி
களில் சிறப்பு பேச்சாளராக நான்
கலந்து கொள்வதும் உண்டு.

மக்கா நகர வீதிகளில் நாங்கள்
நடந்தால் எங்களை தெரியாத
இந்திய மக்களே இல்லை எனலாம்.
எங்கள் மீது அவ்வளவு நம்பிக்கை.
எங்களை விட்டால் எகிப்திய
டாக்டர்களைத் தான் மக்காவில்
பார்க்க வேண்டும்.எகிப்திய
டாக்டர் என்றால் இந்திய
மக்களுக்கு மிகவும் பயம்.

என்னை பற்றிய முழு தகவல்
அடங்கிய புத்தகம் ஒன்றை
அச்சடித்து மக்கா நகர் முழுக்க
உள்ள ஸ்கூல் பள்ளிகளில்
வீடுகளில் எல்லாம் மருத்துவமனை
சார்பில் விநியோகம் செய்தார்கள்.

பிலீவ் இட் ஆர் நாட்..
ஆல் ஆஃப் அ ஸடன்
ஐ பிகேம் எ ஃபேமஸ்
பீடியாட்ரீசியன் இன் மக்கா

மக்காவில் என்னை பார்க்க
என் உதவி தேடி,நாடி தவம்
கிடந்தவர்களே இந்தியாவில்
இப்போது என்னை பார்த்தால்
முகத்தை சற்று திருப்பிக்
கொள்கிறார்கள்.அல்லது
மக்காவில் அன்று, தான்
இருந்த நிலையை சற்று
மறந்து விடுகிறார்கள்.
doctors are same
everywhere
but the place makes
all the difference

Vavar F Habibullah

No comments: