காஃபிக்கொட்டை, காஃபிச் செடியின் பெர்ரி பழத்திலிருந்து கிடைக்கிறது. இது காஃபியா (Coffea) என்ற தாவர இனத்தைச் சேர்ந்தது. காஃபியா கேனெபொரா (Coffea canephora) மற்றும் காஃபியா அராபிகா (Coffea arabica) என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. காஃபிச் செடியின் பூர்வீகம் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள எத்தியோப்பியா. தென் எத்தியோப்பியாவில் காஃவா (Kaffa, கா’வ்’வா) என்னுமிடத்தில் முதலில் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அரபு மொழியில் கஹ்வா (qahwa) என்றால் காஃபி செடி என்று பொருள். 12 ஆம் நூற்றாண்டுகளில் எத்தியோப்பியாவிருந்து எகிப்து மற்றும் எமன் நாடுகளுக்குப் பரவியது.
காபியின் முதல் ஏற்றுமதி கராச்சியிலிருந்து ஏமன் நாட்டிற்கு நடந்தது. ஏமன் நாட்டில் காபியை கடவுள் போல் பார்த்தார்கள். வழிபாட்டில் கடவுள் பெயரைச்சொல்லும்போது உற்சாகம் ஏற்படுத்தும் பானமாக முதலில் உபயோகித்தார்கள். சூஃபிக்கள் இரவு கடவுள் வழிபாட்டின்போது தூக்கம் வராமல் இருப்பதற்குக் காபி குடித்தார்கள். மெதுவாக இந்தப் பானம் 1414 ல் மெக்காவிற்கும், 1500 ல் எகிப்து நாட்டிற்கும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஊடுருவத் தொடங்கியது.
வழிபாட்டில் கடவுள் பெயரைச்சொல்லும்போது உற்சாகம் ஏற்படுத்தும் பானமாக முதலில் உபயோகித்தார்கள். சூஃபிக்கள் இரவு கடவுள் வழிபாட்டின்போது தூக்கம் வராமல் இருப்பதற்குக் காபி குடித்தார்கள்.
முழு கட்டுரை படிக்க > ஒரு கப் ’காபி’: வரலாறும், வளர்ச்சியும்!
No comments:
Post a Comment